பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வினை மீட்டுவோம் தலைவன்: வானத்திலே கோட்டைகட்டித் தோட்டம் படைத்தேன் - அங்கே வாசமலர் பூத்திருக்க வாழ்வு கொடுத்தேன் தேன் குடிக்கும் நாளை எண்ணிச் சிந்தை மகிழ்ந்தேன் - அந்தத் தெய்வமலர் வாடியதால் தேய்ந்து சிதைந்தேன் தலைவி: காய்ந்தமலர் வீழ்ந்துவிட்டால் காலம் மாறுமே - அந்தக் காலத்திலே வேறுமலர் பூத்துக் காணுமே "ங் பூத்தமலர் வாழ்வுதனில் புதுமை காட்டுமே - அந்தப் புதுமைஎலாம் நாளுமின்பப் போதை யூட்டுமே 73