பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - * -- _ --- வெண்ணிலவே கண் வளராய்! கடைந்தெடுத்த பொற்சிலையே கண்காணும் தேவே நடந்துவரும் வெண்ணிலவே நாண் மலரே கண்வளராய் வீட்டுப் பெரியோர் விளைத்துவரும் என்துயரை ஒட்டப் பிறந்தவனே உத்தமனே கண்வளராய் புலர்காலை வீசுகின்ற பூங்காற்றே நின்றன் மலர்விழிகள் நீர் சிந்த மனம்பொறுக்க வல்லேனே பசியால் அழுதாயோ பாலகனே கண்கள் கசியாதே அன்போடு கலந்துபால் நான்தருவேன் நிலத்தில் எழுஞ்சுடரே நித்திலமே என் கலியை விலக்கப் பிறந்தவனே வீட்டிற் கணிகலமே உழைப்பார் நிலையுணர்ந்தோ ஒண்டவந்தோர் இங்கே கனைப்பாறித் தீங்கிழைக்கும் கயமைக் குனங்கண்டோ தமிழ்வளர ஏதும் தடங்கல் வருமென்ருே இமைமூட மனமின்றி இருக்கின்ருய் என் கண்ணே மடங்கல் உரங்காட்டும் மாமல்லர் காத்திடுவார் தடங்கல் வாராது தம்பி நீ கண்வளராய் பழிப்புரைகள் வந்தணையப் பார்த்திருக்க மாட்டார்கள் விழித்துவிட்டார் உன்னட்டார் விளுக அஞ்சாதே 83