பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை சட்டையை அழுக்காக்கி விட்டாய்-நோய்க்குச் சாருமிடம் நீதந்து மேனிநலம் கெட்டாய் பட்டம்விட் டாடுகிறபோது - செய்தாய் பக்கத்து வீட்டுக் குழந்தையொடு வாது சினந்தேன் நீ உண்ணுகிற போது - சோற்றைச் சிதறிய்ை வீடெங்கும் என்றறிந்த போது மனம்போன போக்கிலுனை வைதேன்- பிள்ளை மனநிலையை அறியாதிக் குற்றங்கள் செய்தேன் குற்றம் பொறுப்பாய் என் கண்ணே- என நான் கூறுவதை அறியாய் நீ புரியாய்என் கண்ணே செற்றம் தவிர்ந்தேன் என் கண்ணே - நாளை செல்வமே உன்ைேடு விளையாடு வேனே

82