பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை _ _ என்ன உலகமடா? தேமலர்ச் சோலைதனில் - ஒருநாள் சென்று புகுந்திருந்தேன் மாமரக் கூட்டமங்கே - பூத்து மாமனம் வீசியதே தென்றல் உலா வரலால் - இனிமை தேடி வரவுங்கண்டேன் ஒன்றிய நல்லமைதி - நெஞ்சில் ஓங்கிட நின்றிருந்தேன் எங்கிருந் தோ இனிய - குரலொன் றென்னைக் கவர்ந்ததுவே அங்கிருந் தேகினன்நான் - குரல்வரும் அந்தத் திசைவழியே கன்னங் கரியஉடல் - எழிலைக் காட்டும் சிவந்த கண்கள் மின்னும் அழகினையே - கண்டு மெய்மறந் தங்குநின்றேன்