22 அம் முடங்கலின் முகப்பில் மாதவியின் மணங்கமழ் கூந்தல் இலச்சினையைக் கண்டு மனம் குழைந்தான். முடங்கலேப் பிரித்து வாசித்து மாதவியின் கருத்தை உணர்ந்தான். ஊழ்வினையின் உறுபயனே கினேந்து உள்ளம் வருந்தினன். அவ் ஓலே, தனது பெற்ருேர்க்கு அனுப்புதற்கும் ஏற்ற பெற்றியதாக இருத்தலேக் கண்டான். இதனையே எனது வணக்கத்துடன் தந்தையிடம் கொண்டு காட்டுக,' என்று வேண்டி அக் கோசிகனை வழியனுப்பினன். மதுரை அடைதல் பின்னர்க் கோவலன் முதலான மூவரும் ஆங்கு கின்றும் புறப்பட்டு முன்போலவே இரவில் வழி நடந்து காடும் நாடும் கடந்து செல்வாராயினர். சின்னுட்களில் பீடுமிக்க மாட மதுரையின் மதிற்புறத்தே வந்து சேர்க் தனர். ஆங்கிருந்த தவச்சாலை ஒன்றில் சென்று தங்கினர். மறுகாட் காலேயில் கோவலன் எழுந்து, கவுந்தியிடமும் கண்ணகியிடமும் விடைபெற்று மதுரை மாநகருட் புகுந்தான். பற்பல தெருக்களிலும் சென்று, மதுரைப் பெருவளத்தையெல்லாம் கண்டு மகிழ்ந்தான். மீண்டு வந்து மதுரைச் சிறப்பையும் பாண்டி மன்னவன் செங் கோன்மையையும் கவுந்தியடிகட்குக் கூறினன். அப் பொழுது அங்கு வந்த கட்பாளனுகிய மாடலன் என்னும் மறையவனேக் கண்டு அவனுடன் உரையாடிக் கொண் டிருந்தான். - கண்ணகி அடைக்கலம் - அவ் வேளையில் அங்கு வந்த ஆயர் முதுமகளாகிய மாதரியைக் கவுந்தியடிகள் கண்டாள். அவளுடைய உயர்ந்த குணாலங்களே உணர்ந்த கவுந்தியடிகள்,
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/31
Appearance