பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 யோன் பத்தினி என்பது உண்மையானல் இம் மதுரை மாங்கரத்தையும் ஒழிப்பேன்,' என்று சபதம் கூறி ள்ை. மன்னன் அரண்மனையைவிட்டுப் புறப்பட்டு மதுரையை மும்முறை வலம் வந்தாள். தனது இடது மார்பைத் திருகி எடுத்து வானில் சுழற்றி எறிந்தாள். உடனே, நகரின் பல இடங்களையும் பெருந்திப்பற்றி எரிக்கத் தொடங்கியது. அத் தீயின் வெம்மைக்கு ஆற்ருத மதுராபதி என்னும் பெண்தெய்வம் கண்ணகியின் முன்னர்த் தோன்றியது. அவளே நோக்கி, 'யான் இந்நகரின் தெய்வம். இந் நகரிலிருந்த பாண்டியர்களுள் எவரும் கொடுங்கோன்மை உடையரல்லர். இப்போது இறந்த நெடுஞ்செழியனும் அத்தகையனே. எனினும் இத் துன்பம் நினக்கு விளந்தமைக்குக் காரணம் வினைப் பயனே. சிங்கபுரத்து அரசனகிய வசு என்பானிடம் பணிசெய்துவந்த பரதன் என்பான், அவ்வூர்க் கடைத் தெருவில் பண்டம் விற்றுக்கொண்டிருந்த சங்கமன் என்னும் வணிகனேப் பகைவனது ஒற்றன் என்று அரசன்பால் பிடித்துக் கொடுத்துக் கொலைசெய்து விட்டான். அச் சங்கமனின் மனைவியாகிய நீலி பெருந் துயருற்றுப் பலவிடத்தும் அலேந்து திரிந்தாள். பதி ன்ைகாம்நாள் ஒரு மலேமீது ஏறி ' எனக்கு இத் துன்பத்தை இழைத்தோர் மறுபிறப்பில் இத்தகைய துன்பத்தை எய்துவாராக,' என்று சாபமிட்டுக் குதித்து உயிர்நீத்தாள். அப் பரதனே கோவலகைப் பிறந்தான். ஆதலின், நீங்கள் முன்னேத் தீவினையால் இவ் இன்னலை அடைந்தீர்கள். நீ இற்றைக்குப் பதி ஞன்காம் நாள் பகல் கழிந்தபின், கின் கணவனைக்