உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. மணிமேகலைக் காவிய மாண்பு ஐம்பெருங் காவியங்களுள் ஒன்ருக விளங்குவது மணிமேகலை என்னும் நூல். இது காவியத் தலைவி யாகிய மணிமேகலையின் பெயரையே தன் பெயராகத் தாங்கி மிளிர்வதாகும். மதுரைக் கூலவாணிகன் சீத் தலைச் சாத்தனராகிய நல்லிசைப் புலவர் இந் நூலைத் தமிழ்த்தாயின் இடையினை அணிசெய்யும் மணிமேகலை பாக ஆக்கிப் புனேந்து அகமகிழ்ந்தார். இந் நூலும் சிலப்பதிகாரத்தைப் போன்று முதன்முதல் தமிழி லேயே தோன்றிய சிறந்த காவியமாகும். இந்நூல் கூறும் வரலாறு நிகழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தவர் சாத்த னர். அவர் வரலாற்றில் வரும் பல நிகழ்ச்சிகளைக் கண்ணுரக் கண்டவர் ஆதலின் உண்மை வரலாற்றை உரைக்கும் உயர்ந்த காவியம் மணிமேகலை. இந் நூலாசிரியராகிய சீத்தலைச் சாத்தனர் சங்கத் துச் சான்ருேருள் தலைமை சான்ற தமிழ்ப் புலவர். சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகட்குத் தமிழாசிரியராக விளங்கிய தகையுடையார். பல சமய நூல்களைத் தெளிவுறக் கற்றுத்தேர்ந்த திறமுடையார். பெளத்த சமயத்தில் ஆழ்ந்த பற்றும் தோய்ந்த அறிவும் உடையவர் ஆதலின் பெளத்த சமயச் சார்பினளாகிய மணிமேகலையின் வரலாற்றைச் சமய இலக்கியமாகவே சமைத்துவிட்டார். பெளத்த சமயக் கொள்கைகளை யெல்லாம் நூல் முழுவதும் விரித்து உரைக்கின்ருர், அவர் தமது சமய உணர்ச்சியை நூலில் மிகுதியாகவே காட்டியிருக்கின்ருர், நூலின் பிற்பகுதி முழுதும் புத்த சமயக் கொள்கைகளுக்கு உயர்வு கற்பிக்கவே எழுந்தன என்று இயம்பலாம். எனினும் நூலின் முற்பகுதி,