அணிந்துரை கன்னித் தமிழ்மொழியில் காவியங்கள் பல உண்டு. அவற்றுள் பெருங்காவியங்கள் சிலவே. அவற்றுள்ளும் முதற் பெருங்காவிய மாகத் திகழ்வது சிலப்பதிகாரமே. அதனை அடுத்துத் தோன்றிய மணிமேகல்ை இரண்டா வது பெருங்காவியமாகும். இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகாரத்தைச் சமண காவியம் என்பர், சீத்தலைச் சாத்தனரின் மணிமேகலை யைப் பெளத்த காவியம் என்பர். இவற்றிற்குப் பின்னர்ப்பத்தாம் நூற்ருண் டில் தோன்றிய சிந்தாமணியே பெருங்காவிய மாகும். இதனே யடுத்துப் பன்னிரண்டாம் நூற்ருண்டில் சேக்கிழார்பெருமான் பெரிய புராணம் என்னும் பெருங்காவியத்தை அரு ளினர். அப் பெரியபுராணம் சைவக் காவியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகிய முப்பெருங் காவியங்களைப் பற்றியும் தற்கால இளேஞர் உலகம் தெளிவாகத் தெரியவேண்டும். அவற்றைப் பிற்காலத்தில் அான்முழுதும் ஓதி உணர்ந்து இன்புற வேண்டும்; அதற்குரிய உணர்ச்சியை இளமை உள்ளத்திலேயே எழுமாறு செய்யவேண்டும். இவை போன்ற கன்ளுேக்கங்களுடன் இனிய
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/7
Appearance