பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 ள்ை. மாதவியின் மொழியைக் கேட்ட அத் தோழி பெறலரும் மணியைப் பெருங்கடலில் வீழ்த்தியவர் போன்று வெந்துயருடன் மீண்டாள். மணிமேகலை உவவனம் புகுதல் மலர் மண்டபத்தில் தாயுடன் மலர் தொடுத்துக் கொண்டிருந்த மணிமேகலை தன் தந்தையாகிய கோவல னுக்கும் தாயாகிய கண்ணகிக்கும் ம துரையில் நேர்ந்த கொடுந்துன்பத்தைக் கேட்டுக் கண்ணிர் சொரிந்தாள். அவளது கண்ணிர் அவள் தொடுத்துக் கொண்டிருந்த மாலையை கனத்தது. மாதவி அது கண்டு அவளது கண்ணிரைத் துடைத்தாள். அவள் மனத்துயரை மாற்றக் கருதி, இம் மாலை கின் கண்ணிரால் தூய்மை இழந்தது . ஆதலின் வேறு மாலே தொடுத்தற்குச் சுதமதியுடன் சென்று புதுமலர் கொய்து வருவாய்' என்று அனுப்பிள்ை. உதயகுமரன் பின்தொடர்தல் புதுமலர் கொய்யப் புகுந்த மணிமேகலையும் சுதமதி யும் விழாவயரும் வீதிகள் வழியாக நடந்து உவவன்ம் நோக்கிச் சென்றனர். தவக்கோலம் தாங்கிச் சென்ற மணிமேகலையைக் கண்ட நகர மாந்தர் அனைவரும் வருந்தினர். இவ்வேளையில் மதவெறியால் நகரைக் கலக்கித் திரிந்த காலவேகம் என்னும் களிற்றின் மதத்தை அடக்கிய உதயகுமரனகிய அங்காட்டு இள வரசன் தேரில் ஏறி ஆரவாரத்துடன் தெருவில் வந்து கொண்டிருந்தான். அவன் மணிமேகலை உவவனம் கோக்கிச் செல்வதை உணர்ந்து, தேரை விரைந்து செலுத்தி உவவனத்தின் வாயிலை அடைந்தான்.