உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

காவிரிப் பிரச்சினை மீது

அவர்கள் மறந்திருக்கலாம். அவருக்குக் கவனத்திற்கு வராமல் இருக்கக்கூடும். ஹேமாவதியில் அணை கட்டுவதைத் தடுக்க ஸ்டே நாம் கேட்டோம். ஹேமாவதியில் அணை கட்டுவதற்கு ஸ்டே கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் அதற்கு ஸ்டே கொடுக்கவில்லை. அதுதான் உண்மையே தவிர, நாம் ஸ்டே கேட்காமல் இல்லை. நாம் ஸ்டே கேட்டோம். ஆனால், சுப்ரீம் கோர்ட் ஸ்டே கொடுக்கவில்லை. பிறகுதான் வழக்கை வாபஸ் வாங்கினோம். எல்லாக் கட்சிகளுக்கும் அறிவித்துவிட்டுதான் வாபஸ் வாங்கினோம். எஸ்.டி.சோமசுந்தரம் சொல்லியிருப்பது தவறு. அனைத்துக் கட்சிக் கூட்டம் பலமுறைகள் கூட்டப்பட்டு இருக்கின்றது. அதோடு மட்டுமல்ல, டெல்லிக்குச் செல்வதற்கு முன்னாலேகூட எல்லாக் கட்சிகளையும் கலந்துகொண்டுதான் டெல்லிக்குச் சென்றிருக்கிறேன். இந்தப் பிரச்சினை பற்றி பேசிவிட்டு வந்த பிறகு, அங்கே டெல்லியிலே அவர்களிடம் என்ன என்ன பேசப்பட்டது என்பதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். முன்னாள் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் திரு.காமராசர் அவர்களிடம் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். பின்னர் என்னென்ன நடந்தது, என்னென்ன பேசவேண்டும் என்று கலந்து பேசியிருக்கிறேன். அதேபோல பெரியவர் திரு. பக்தவத்சலம் அவர்களிடமும் கலந்து கொண்டுதான் போவேன். திரும்பி வந்து அங்கு நடந்தது என்ன என்று சொல்லிடுவேன். இங்கு எல்லோருடைய கருத்தையும் அறிந்த பிறகுதான் செல்வேன். திருமதி இந்திராகாந்தி அவர்கள் பேசும்போது. நீங்கள் வழக்கு போட்டிருக்கின்றீர்களே, அப்படியிருக்கும்போது பேசமுடியாது, அந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார். வாபஸ் வாங்கினோம். அது மட்டுமல்ல அந்த வழக்கை வாபஸ் வாங்கும்போது liberty to file a fresh suit, if necessary on the same cause of action என்ற நிபந்தனையோடுதான் வழக்கை வாபஸ் வாங்கியிருக்கிறோம். கடந்த பத்து ஆண்டுகளாக வழக்குப்போட யாரும் தடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி. பி. ஐ., முஸ்லீம் லீக் ஆகிய அனைவரையும் இந்தப் பிரச்சினையில் அணுகி ஒன்றாகச் செய்யவேண்டும் என்று மீண்டும் கூறி அமைகிறேன்.

கு