கலைஞரின் சட்டமன்ற உரைகள்
115
திரு.எஸ்.ஆர்.இராதா : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதிலே கட்சிப் பிரச்சினை என்று வர வேண்டாம். இதிலே காவிரிப் பிரச்சினை என்று வருகின்றநேரத்தில் தமிழகத்தினுடைய முதல்வர் கலைஞர் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறாரோ அதே போலத்தான் அந்த மாவட்டத்தி லேயே பிறந்து வளர்ந்த காரணத்தினால் நானும் பாதிக்கப்படு கிறேன். ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்க்கிறோம். தண்ணீர் வருவது தாமதப்படுத்தப்படுமேயானால் தஞ்சை மாவட்டம் பாதிக்கப்படும். அதன் மூலமாக தமிழகம் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதையும் நாம் நிச்சயமாக உணர வேண்டும். இன்றைக்கும் தண்ணீர் வருமா, வராதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தண்ணீர் வரவேண்டும். தஞ்சை மாவட்டத்திலே இருக்கின்ற பயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் இருக்கின்ற நீர்ப்பாசன வசதிகள் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்ளுகிறேன்.
ஆனால் இந்தப் பிரச்சினை வருகிறபோது திடீரென்று இதனை அரசியல் பிரச்சினையாக்கி, எங்களுடைய கட்சியினுடைய இணைப் பொதுச் செயலாளர் திரு.எஸ்.டி.எஸ். சொன்னதை மறுத்துச் சொல்லி அரசியல் பிரச்சினையாக இதனை இந்த மன்றத்திலே ஆக்க வேண்டாமென்று தயவுசெய்து அவர்களுக்கு சொல்கிறேன். நான் இந்த மன்றத்திற்குத் தெரிவிப்பதெல்லாம், திரு. எஸ். டி. எஸ். அவர்களும் தஞ்சை மாவட்டத்துக்காரர்தான். அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சினையில் ஆரம்பக்காலத்திலிருந்து, தி.மு.க. ஆட்சிக் காலத்திலிருந்து அவர் எந்த அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக கலந்துகொண்டவர் என்பது என்னைவிட அனுபவம் வாய்ந்த நம்முடைய முதல்வர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அவர்கள் பேசியதை வைத்துக் குழப்பவேண்டாம் அனைத்துக் கட்சிகளையும் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டை அன்றில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அனைத்துக் கட்சிகளையும் கேட்டுத்தான் வழக்கு வாபஸ் பெறப்பட்டது, அதுமாத்திரமல்ல, திருமதி. இந்திரா காந்தி அவர்கள் சொன்ன வாசகங்களை கேபினட்டில் வைத்து எல்லோருடைய அனுமதியையும் கேட்ட பிறகுதான் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.