உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

காவிரிப் பிரச்சினை மீது

உரை : 12

நாள் : 24.01.1990

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, காவிரிப் பிரச்சினை குறித்து நம்முடைய திரு.தீட்சிதர் அவர்கள் கூட இன்று காலையில் விளக்கமாகப் பேசினார்கள். அதைப்பற்றி சில ஆதாரபூர்வமான உண்மைகளை இந்த மாமன்றத்திலே வைக்க விரும்புகிறேன். வழக்குகளை, அதாவது காவிரிப் பிரச்சினையிலே தமிழ் நாட்டினுடைய உரிமையை மையப்படுத்தி நாம் தொடர்ந்திருந்த வழக்குகளை எந்தக் கட்சியையும் கேட்டுக்கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர் தானாக முன்வந்து அன்றைக்குத் திரும்பப் பெற்றுவிட்டார் என்கின்ற ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இங்கே அவையிலே பேசப்பட்ட, எடுத்து வைக்கப்பட்ட உண்மையான ஆதாரங்களை மறுத்து, ஏதோ வெளியிலே பத்திரிகைகளிலே புழுதி வாரித் தூற்றிவிட்டால்- அதை வெளியிடுவதற்கும் சில பத்திரிகைகள் இருக்கின்ற காரணத்தால், அவர்களே அந்தப் பத்திரிகைக்காரர்களே இதை ஆராயாமல் இது எப்படி உண்மையாக இருக்க முடியும், எது உண்மையான ஆதாரம், எது போலியான ஆதாரம் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் சில பத்திரிகைக்காரர்கள் அதைப் பெரிய அளவிலே வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிற காரணத்தால் அப்படி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் 7-5-1972-லே இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்டோம். எதிர்க்கட்சித் தலைவர்களைக் கலந்து ஆலோசிக்காமலே வாபஸ் பெற்று விட்டோம் என்றும் இன்னொரு குற்றச்சாட்டாக ஹேமாவதி, கபினி, ஹாரங்கி நதிகளில் கட்டப்படும் அணைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்பு இருந்த கழக அரசு முன் வரவில்லை என்கின்ற மற்றொரு குற்றச்சாட்டையும் சொல்லி தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயப் பெருங்குடி மக்களுக்கு திராவிட