உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

காவிரிப் பிரச்சினை மீது

கொண்டிருந்தார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. வழக்கைத் திரும்பப் பெறும்பொழுதே இதே பிரச்சினைக்காக மீண்டும் வழக்கைத் தொடரலாம் என்கிற அந்த நிபந்தனையோடுதான் வழக்குத் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது ஆனால் 10 ஆண்டுக் காலத்தில் எந்த முயற்சியும் செய்யப்பட வில்லையா அல்லது செய்து கடந்த காலத்திலே நடைபெற்ற அதே பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சிதான் விளைவாக இருந்ததா என்பதை யெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

நான் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்க அன்றும் சரி, இன்றும் சரி, என்றைக்கும் விரும்பவில்லை. ஆனால் இன்றைக்குக் கூட பத்திரிகையிலே பார்த்தேன், கர்நாடக சட்டசபையில் நாம் கேட்ட தண்ணீரை அளிக்க இயலாது என்று திட்டவட்டமாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள். 30 டி.எம்.சி. கேட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். 30 டி.எம்.சி. கேட்டு, அவர்கள் தரத் தயங்கிய பிறகு, அந்த 30 டி.எம்.சி. வேண்டுமென்று வலியுறுத்தி முதல் அமைச்சர் திரு.வீரேந்திர பட்டீலோடு இரண்டுமுறை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசினேன். அவர் தருகிறேன் என்று சொன்னார். பிறகு, பொதுப்பணித்துறை அமைச்சரை அனுப்பி வைத்தேன். பொதுப்பணித்துறை அமைச்சர். அந்த மாநிலத்திலே முதல் அமைச்சர் இருப்பார், அவர் மாலையிலே பெங்களூர் வருவார் என்ற அந்த நம்பிக்கையோடு அங்கே சென்றார். ஆனால் அந்த மாநில முதல் அமைச்சர் பெங்களூருக்குத் திரும்பாமல் டெல்லிக்குப் போய் விட்டார். டெல்லியிலும் விடவில்லை; அங்கே இருக்கிற மத்திய அமைச்சர் திரு.மாறனிடம் சொல்லி, திரு.வீரேந்திர பட்டீலோடு தொடர்பு கொள்ளச் சொன்னேன். அவரும் தொடர்பு கொண்டு பேசினார். அங்கிருந்து திரு.வீரேந்திர பட்டீல் சொன்னார், உங்கள் பொதுப் பணித்துறை அமைச்சரை மீண்டும் பெங்களூருக்கு அனுப்பி வையுங்கள் பேசுகிறேன் என்று. பொதுப்பணித்துறை அமைச்சர் பெங்களூர் சென்று அங்குள்ள நீர்ப்பாசனத்துறை அமைச்சரோடு பேசினார், அதிகாரிகளோடு பேசினார்; அன்று மாலையிலே முதல் அமைச்சர் திரு. வீரேந்திர பட்டீலோடு பேசினார். எங்களால் இயன்றதைச் செய்கிறோம், உங்கள் முதல் அமைச்சரிடம் சொல்லுங்கள், நம்பிக்கையோடு இருக்குமாறு என்று சொல்லி