உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

121

அனுப்பினார்கள். அதற்குப் பிறகு, இங்குள்ள கஷ்டத்தை அவர்களுக்குப் புரிய வைத்து, 15டி.எம்.சி. யாவது வழங்குங்கள் என்று நாம் கேட்டு கடிதம் எழுதினோம். 15 டி.எம்.சி. வழங்குவதைப் பற்றி யோசிக்கிறோம் என்று அங்கிருந்த பொதுப் பணி அமைச்சர்-கர்நாடகத்துப் பொதுப் பணித்துறை அமைச்சர் பேசியதாகச் செய்தி வந்தது. நேற்றைய தினம் சட்டசபையிலே சொல்லியிருக்கிறார்கள், 30டி.எம்.சி. தர இயலாது என்று. பேசித் தீர்க்கலாம் என்று சொல்கிறார்களே, நாம் இன்றைக்கு வறண்டு போயிருக்கிற அல்லது இன்னும் சில நாளில் வறண்டு விடக்கூடிய அல்லது வாடி உலர்ந்து விடக்கூடிய பயிர்களைக்காட்டி, தஞ்சை, திருச்சி போன்ற காவிரி நதித் தீரத்திலே வாழ்கின்ற தமிழக விவசாயிகளுடைய வயிற்றிலே அடிக்காதீர்கள் என்று இறைஞ்சிக் கேட்கின்ற இந்த நேரத்திலே கூட ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக 10 டி.எம்.சி. யோ, 15டி.எம்.சி. யோ வழங்குவதற்குத் தயாராக இல்லாதவர்களிடத்தில் பேசி என்னபயன் விளையும் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

கடந்த காலத்திலே ஜனதா தள ஆட்சியுடைய தலைவர், முதலமைச்சர் திரு.பொம்மை அவர்கள் இங்கே வந்தபோது, ஒரு பொதுக் கூட்டத்திலேதான், இந்த அமைச்சரவைக்கு நடைபெற்ற வாழ்த்துக் கூட்டத்தில், காவேரியிலிருந்து 5டி.எம்.சி. தண்ணீரை அவசரமாகத் தரவேண்டுமென்று கேட்டபோது அவர் அந்தக் கூட்டத்திலேயே அறிவித்தார். அடுத்த ஒன்றிரண்டு வாரங்களில் அந்த 5 டி.எம்.சி. தண்ணீரை ஜனதா தளக் கட்சியினுடைய முதலமைச்சர் நண்பர் திரு.பொம்மை அவர்கள் உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கினார்கள்.

வேடிக்கை என்னவென்றால். அதற்கு முன்பு கவர்னர் ஆட்சியிலும் 5டி.எம்.சி. தண்ணீர் தரப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நண்பர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது அங்கிருந்து தண்ணீர் தரும்போதெல்லாம் அதற்கு மாற்றாக இங்கிருந்து மின்சாரம் தரப்பட்டிருக்கிறது. அப்படித் தரப்பட்ட மின்சாரத்திற்கு பரிமாற்றமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக அதற்கு ஓரளவு கட்டணமும் கேட்கப்பட்டிருக்கிறது. இது எம். ஜி. ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது