உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

129

கர்நாடகம் கோரியது. தமிழ்நாட்டின் தேவையை 444 டி.எம்.சி என்று எடுத்துக் கொண்டு - இரு மாநிலங்களுக்கும் மொத்தமாக 858 டி.எம்.சி. தேவை என்று கர்நாடகா சார்பில் மதிப்பிடப்பட்டது. அதற்கு மாறாக காவிரிப் பாசனப் பகுதியிலே 75 சதவிகித நம்பகமான அடிப்படையில் 670 டி.எம்.சி. அளவிற்கு மட்டுமே நீர் ஆதாரங்கள் இருப்பதால், 188 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்படும் என்றும், இந்தப் பற்றாக்குறையை இரு மாநிலங்களும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றும் கர்நாடக மாநில சார்பிலே சொல்லப்பட்டது.

இதன்பொருட்டு, மத்திய நீர்க் குழு வல்லுனர்களோ அல்லது இரு மாநிலங்களின் பொறியாளர்களோ ஒரு ஆய்வு செய்ய வெண்டுமென்று கர்நாடகா கூறியது.

தமிழ்நாடு இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. 100 டி.எம்.சி. சிக்கனத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே 444 டி.எம்.சி. தமிழ்நாட்டின் மிகக் குறைந்தபட்சத் தேவையாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதனை நிகரப் பற்றாக்குறையை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் மேலும் எந்த அளவிற்கும் குறைக்க இயலாதென்றும் தமிழகத்தின் சார்பில் திட்டவட்டமாக விளக்கப்பட்டது.

1934-72 காலக் கட்டத்தில் தமிழ்நாடு சாரசரியாக 566 டி.எம்.சி. உபயோகித்துள்ளது. இதற்கு மாறாக கர்நாடகத்தின் தேவையை 414 டி.எம்.சி அளவிற்கு உயர்த்திவிட்டு. தமிழ்நாட்டின் தேவையை 444 டி.எம்.சி-க்கும் குறைத்த பின்னரும், இதற்கு மேலும் தமிழ்நாடு தனது தேவையைக் குறைக்க வேண்டுமென்று கர்நாடகம் வாதாடுகிறது சரியல்ல என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

-

தமிழ்நாட்டின் தேவையை 566 டி.எம்.சி. யிலிருந்து 444 டி.எம்.சி. யாகக் குறைத்துவிட்டு, கர்நாடகம் தனது தேவையை இப்போது 237 டி.எம்.சி. அதிகப்படுத்திக் காட்டி பற்றாக்குறையை சமமாகப் 'பங்கிடுவது' என்ற பெயரால் மேலும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரைக் குறைக்க முயற்சிப்பதை ஏற்பதற்கில்லை.

மத்திய நீர்க் குழுவினர் புள்ளி விவரங்கள் தர வேண்டுமென்றும். மீண்டும் ஆய்வுக் குழுக்கள் அமைக்க