உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

காவிரிப் பிரச்சினை மீது

வேண்டுமென்றும் கர்நாடக மாநிலம் கூறுவது, பிரச்சினையை காலந்தாழ்த்தி கிடப்பில் போட்டு தமிழகம் மேலும் பாதிக்கப்படுகிற நிலைமையை உருவாக்கும். ஏற்கெனவே, ஆய்வுக் குழு புள்ளி விவரங்களைத் தந்து, அவற்றினை ஏற்று. அந்த அடிப்படையிலேயே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுள்ளன.

இந்த விவரங்களின் பின்னணியில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் விவாதங்களுக்குப் பின்னர், பின்வரும் முடிவிற்கு இந்தப் பேரவையும் வருகிறது:-

“1970ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு அரசு காவிரி நீர்ப் பிரச்சினை நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்படவேண்டும் என்று கோரியது. அதன் பின்னால், இந்த இருபதாண்டுக் காலத்தில் 26 முறை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் அளவிலே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவிட்டன. இறுதியாக 19-4-1990 அன்று நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையிலும் கர்நாடகம் எடுத்துள்ள நிலை, ஓரளவேனும் தமிழ்நாட்டின் குறைந்த அளவு தேவைகளைக் கூட நிறைவு செய்யும் வகையிலே இல்லை.

ஆகவே, பேச்சுவார்த்தை மூலமாக இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண இயலவில்லை என்றும், இனியும் காலதாமதம் ஏற்பட்டால் தமிழ்நாடு மேலும் பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எடுத்துக் கூறவேண்டும். மத்திய அரசும் உடனடியாக இந்தப் பிரச்சினையை நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு இந்தச் சட்டமன்றப் பேரவை மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என்ற இந்த அறிவிப்பை இந்த அவையின் ஏகோபித்த முடிவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.