கலைஞரின் சட்டமன்ற உரைகள்
133
அந்த முடிவு 24 ஆம் தேதி அன்று நடைபெறுகிற இந்த விசாரணைக்கு முன்பு தெரிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னதன் விளைவாக டெல்லியிலே ஒரு முறை பேச்சுவார்த்தை மத்திய அரசினுடைய அமைச்சர் முன்னிலையில் தமிழகத்தின் சார்பிலும் கர்நாடகத்தின் சார்பிலும், கேரளத்தின் சார்பிலும், புதுவை மாநிலத்தின் சார்பிலும், முதலமைச்சர்களும், தொடர்புடைய அமைச்சர்களும் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்று. டெல்லியில் பேச்சுவார்த்தை வெற்றி அடையாமல் முடிவுற்றது.
நமது கர்நாடக முதலமைச்சர் அவர்கள், தமிழக முதலமைச்சரிடத்திலே முதலமைச்சரும் நானும் சென்னையிலே கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கலாம் என்று சொல்லும்போது நான் கர்நாடகத்தை திட்டவட்டமாகக் கேட்டுக் கொண்டேன். அப்படி நடைபெறுவதாக இருந்தால், 24 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, நடைபெற்றாக வேண்டும் என்று கூறி, அதற்காகத் தான் 19 ஆம் தேதி சென்னையில் அந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டு. நானும் கர்நாடக முதலமைச்சர் திரு, வீரேந்திர பட்டீல் அவர்களும் அந்தப் பேச்சுவார்த்தையை நடத்தினோம். அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருக்கிறது. அதற்குப் பிறகு, 'அவர் விடுத்த அறிக்கைகளில் பேச்சுவார்த்தை தொடரலாம் என்றும், அவரே ஒரு அறிக்கையில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லையென்றும் முரண்பட்ட செய்திகளைச் சொல்லியிருக்கிறார். நமக்கு அதில் முரண்பாடான கருத்து இல்லை. முழுமையான கருத்து, பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என்பதுதான். கடந்த 20 ஆண்டுகளாகப் பேசிப் பேசிப் பார்த்து, எந்த விதமான ஒரு முடிவுக்கும் வர முடியாமல், 26 அல்லது 27 தடவைக்கு மேல் பேசிய பிறகும், இனியும் பேச்சுவார்த்தை தொடரலாம் என்பது காலங் கடத்துகின்ற ஒரு முயற்சியாகும். பேச்சுவார்த்தை என்கிற பெயரிலேயே, கடந்த நான்கைந்து ஆண்டுக் காலத்தில் நமக்கு அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவு, மிக மிகக் குறைந்து, 140 டி.எம்.சி., 150 டி.எம்.சி., என்கின்ற அளவுக்குக் குறைக்கப்பட்டு விட்டது. அவர்கள் மேலும் பேச்சுவார்த்தை என்று காலம் கடத்தினால், தமிழ்நாடு மிக மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்