கலைஞரின் சட்டமன்ற உரைகள்
135
தீர்மானம் நேற்றைய தினம் இந்த மாமன்றத்திலே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தீர்மானம் ஒன்று மாமன்றத்திற்கு வந்தால் அது முன்மொழியப்பெற்று அவை உறுப்பினர்களும், பல கட்சிகளுடைய தலைவர்களும் அது குறித்துப் பேசி, பிறகு அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, நிறைவேற்றுவது இந்த மன்றத்தின் மரபு. நேற்று நேரமில்லாத காரணத்தால், தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, இன்றைக்கு அந்தத் தீர்மானத் தின் மீது பேசுகிற நிலையில் எல்லாக் கட்சித் தலைவர்களும், முன் வரிசையில் உள்ள தலைவர்கள் அனைவரும் நீண்ட உரை விளக்க உரை ஆற்றியிருக்கிறார்கள். எல்லா உரைகளுடைய தொகுப்பும் என்னவென்றால், காவிரிப் பிரச்சினை இனிமேல் பேச்சுவார்த்தையிலே முடிவடையக் கூடிய ஒன்றல்ல. நடுவர் தீர்ப்பைத் தவிர வேறு பரிகாரம் கிடையாது என்பதுதான் அனைவரும் எடுத்துக் கூறிய கருத்துக்களின் மொத்தத் தொகுப்பு ஆகும்.
எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பேசும்பொழுது ஊடே ஒரு வாக்கியத்தைச் சொன்னார். கடந்த காலத்திலே வழக்கை திரும்பப் பெற்ற காரணத்தால் ஏற்பட்ட விளைவுகளைத்தான் அனுபவிக்கிறோம் என்று சொன்னார். வழக்கை 1971-72ஆம் ஆண்டிலே திரும்பப் பெற்றதற்கான காரணம் அன்றைக்கு இந்தியப் பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி அவர்கள், “வழக்கு இருக்கிற நேரத்திலே நான் தலையிட்டுப் பேசித் தீர்ப்பது என்பது இயலாததாக இருக்கிறது; எனவே வழக்கைத் திரும்பப் பெற்று பேச்சுவார்த்தை நடத்துங்கள்" என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, பேச்சுவார்த்தையிலே முடிவுறும் என்று நம்பி அன்றைக்கு அந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக -முன்னிலை வகித்தவர் பாபு ஜகஜீவன்ராம் என்ற காரணத்தினால்- அவருடைய பேச்சு எடுபடும்; அவருடைய முன்னிலையிலே இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு தமிழக அரசின் சார்பில் நானும், அதைப் போல கர்நாடகத்தின் முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் அவர்களும், கேரளத்தினுடைய முதலமைச்சர் அச்சுதமேனன் அவர்களும், பாண்டிச்சேரி முதலமைச்சரும் பேச்சுவார்த்தையிலே கலந்துகொண்டு கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெறுகின்ற கட்டத்திலே