136
காவிரிப் பிரச்சினை மீது
ஓரிரு நுணுக்கங்களின் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தை அன்றைக்கு முடிவுறாமல் ஒரு கட்டத் தோல்வியைச் சந்தித்தது.
நாம் வழக்கைத் திரும்பப் பெறுகிற அந்த நேரத்திலே கூட எப்படித் திரும்பப் பெற்று இருக்கிறோம் என்றால் With liberty to file a fresh suit on the same cause of action என்கின்ற அந்த நிலையிலே தான் வழக்கைத் திரும்பப் பெற்று இருக்கிறோமே அல்லாமல், வழக்கே போட மாட்டோம் என்று அல்ல. அதைத் திரும்பப் பெற்ற பிறகு பல ஆண்டுக் காலம் இடையிலே இருந்து இருக்கிறது; கடந்த கால ஆட்சியிலே கூட அந்த வழக்கை திரும்பப் போட்டு இருக்கலாம்; ஆனால் பேச்சுவார்த்தையில் நாம் நம்பிக்கை வைத்து இருந்தோம். ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, 26 தடவை பேசி, இறுதியாக “நானும், தமிழக முதலமைச்சரும், இரண்டு பேரும் பேசினால் இறுதியாக முடிவு காண இயலும்” என்று வீரேந்திர பாட்டீல் அவர்கள் டில்லியிலே அறிவித்ததற்கு இணங்க, அந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த 19 ஆம் தேதி அன்று நடத்திப் பார்த்து, அது தோல்வி அடைந்துவிட்ட காரணத்தால்தான் நாம் உச்ச நீதிமன்றத்துக்கு அங்கே நம்முடைய அரசின் சார்பில் வாதாடுகின்ற வழக்கறிஞர் மூலமாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என்ற குறிப்பை அனுப்பி இருக்கின்றோம். அதுவும் அரசின் சார்பாக மாத்திரம் அல்ல; இந்த மாமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாயிலாகவும் அந்தச் செய்தியை வழக்கறிஞருக்குச் சொல்லி, வழக்கறிஞர் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்திலே இந்தச் செய்தியை எடுத்து உரைத்து இருக்கின்றார்.
இப்போது வீரேந்திர பாட்டீல் அவர்கள், கர்நாடகத்தின் முதலமைச்சர் அவர்கள் திடீரென்று இண்டர்-ஸ்டேட் கவுன்சில் மூலமாகக் கூட இதைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார். இன்னும் இண்டர்-ஸ்டேட் கவுன்சிலுக்கான அடிப்படைகள், அதிலே உள்ள மாறுதல்கள்-இவைகள் எல்லாம் செய்யப்பட்டு அந்த கவுன்சிலே இன்னும் அமையாத சூழ்நிலையிலே அதிலே தீர்த்துக்கொள்ளலாம் என்பது, மேலும் காலம் கடத்தி-இப்போதே கிட்டத்தட்ட 140 டி.எம்.சி. தான் என்கின்ற அளவுக்குக் கொண்டு