கலைஞரின் சட்டமன்ற உரைகள்
141
உரை : 16
நாள் : 26.04.1990
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லீம் லீகினுடைய லத்தீப் பிரிவைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் திரு. லத்தீப் அவர்கள் ஒரு மிக முக்கியமான பிரச்சினையை இந்த அவையினுடைய கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். அவையினுடைய கவனத்திற்கு அவர் கொண்டுவந்ததின் மூலம் நாளைய தினம் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் அதிலே வாதாடுகின்ற நேரத்திலும் அல்லது நடுவர் மன்றத்திற்கான நிலைகளை எடுத்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலே வாதிடுகின்ற நேரத்திலும் அதிலே எடுத்து வைக்கின்ற வகையிலும் தமிழ்நாடு தன்னுடைய வாதத்தை அழுத்தம் திருத்தமாக வைக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவர் இந்தப் பிரச்சினையை இங்கே எழுப்பியிருக்கிறார் என்றே நான் கருதுகின்றேன். இன்று காலையிலே பத்திரிகையிலே, அதிலும் குறிப்பாக இந்து பத்திரிகையிலே வந்துள்ள இந்த இரண்டு செய்திகளும் ஓரளவு அதிர்ச்சி அளிக்கத்தக்க செய்திகளே ஆகும். ஏனென்றால் முதலில் சென்ற - தமிழக அரசின் சார்பாக சென்ற
குழுவில் இரண்டு கட்சிகள் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைகள் அவர்களுக்கு ஏற்பட்டது. அதுகுறித்து அவர்கள் விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். அதோடு நின்றுவிடாமல் ஏன் கலந்து கொள்ளவில்லை. என்பதற்கான பதிலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மூத்த துணைப் பொதுச் செயலாளர் வெளியிடும்பொழுது இந்து பத்திரிகையில் வந்துள்ள அதே வாசகத்தைப் படிக்கிறேன். 'Asked why the AIADMK did not join the All party Delegation to meet the Prime Minister, he said that we hold Mr. Karunanidhi and the D.M.K. Government responsible for failure to renew the Cauvery agreement that ended in 1974. So we decided to keep out of the Delegation',