உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

காவிரிப் பிரச்சினை மீது

என்று மிகத் தெளிவாக பட்டவர்த்தனமாக பத்திரிகையிலே அவர் இப்படிக் கூறியதாக செய்தி வெளிவந்திருக்கிறது.

அது ஒரு கட்சி மாச்சரியத்தோடு தொடர்ந்து அவர் சொல்லிக்கொண்டே வருகின்ற பதில் என்ற அளவிலே விட்டு விட்டாலும்கூட தூதுக் குழுவாக சென்றவர்கள் தமிழகத்தின் சார்பாக மற்றொரு குழுவாக சென்றவர்கள். காங்கிரஸ் நண்பர் களும், அ. தி. மு. க. நண்பர்களும் அவர்களோடு சென்ற அவர்களுடைய தோழமைக் கட்சி நண்பர்களும் தந்த அந்த முறையீட்டில், மெமோரண்டத்தில் The memorandum noted that the agreement on sharing of waters between Tamil Nadu and Karnataka had ended in 1974 and it has to be renewed after taking into consideration fresh facts without affecting the existing rights of the farmers of Tamil Nadu என்று இந்த வாக்கியம் அதிலே அமைந்து இருப்பதைப் பார்க்கும்போது திரு. வீரேந்திரப் பாட்டீல் அவர்கள் 1968ஆம் ஆண்டு நான் அவரை முதன் முதலாக டெல்லியில் இந்தப் பேச்சுவார்த்தைக்காக தமிழகத்தி னுடைய பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலே அண்ணா அவர்களால் அனுப்பப்பட்டபோது இதே வாசகத்தைத் தான் அவர் சொன்னார். 24ஆம் ஆண்டு ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டோடு முடிந்து விடுகிறது என்று 6 ஆண்டுக்கு முன்பே அவர் சொல்லத் தொடங்கிவிட்டார். ஏன் என்று அவர் அதற்குச் சொன்ன காரணம் இது தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள ஒப்பந்தம் அல்ல, இது ஏற்கெனவே இருந்த மைசூர் அரசினுடைய பூசோனத்திற்கும் ஏற்கெனவே இருந்த சென்னை ராஜதானி, மெட்ராஸ் ஸ்டேட், மெட்ராஸ் ப்ராவின்ஸ் என்று அந்த நிலப்பரப்புக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தமே அல்லாமல் இதை பொது ஒப்பந்தமாக எங்களால் கருதப்படமாட்டாது; நிரந்தர ஒப்பந்தமாக கருதப்படமாட்டாது. ஏன் என்றால் இது மைசூருக்கும், சென்னை ராஜதானிக்கும் நடைபெற்ற ஒப்பந்தம். அது மட்டும் அல்ல. வெள்ளைக்காரன் காலத்திலே போடப்பட்ட ஒப்பந்தம். எனவே, இப்போது சுயராஜ்யம் வந்த பிறகு அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளுவதற்கு இல்லை என்கின்ற இந்த வாதங்களை அவர் அடுக்கிக்கொண்டே போனார். இப்போது அதே நிலையிலே அவருடைய வாதத்தை வலுப்படுத்துகின்ற வகையில் உண்மையிலேயே இந்து பத்திரிகையில் வந்து இருக்கின்ற இந்த இரண்டு வாசகங்கள் அவர்கள் சொன்னதாக இருக்குமானால் அல்லது மெமோரண்டத்திலே குறிப்பிட்டதாக