உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

147

என்றெல்லாம் நான் அவர்களிடத்திலே விளக்கம் கேட்டிருக் கிறேன். அவரும் சில டிக்ஷனரியினுடைய நகலையெல்லாம் எடுத்து, இந்த நிலையிலே நான் அந்த வார்த்தைகளைப் போட்டேன் என்று அவர் என்னிடத்திலே சொல்லியிருக்கிறார். ஆனால், இந்தக் கருத்தை அவர் வலியுறுத்துகிற நேரத்தில் அவருடைய அடிப்படைக் கருத்து என்ற அடிப்படையில். . .

திரு. சா. பீட்டர் ஆல்போன்ஸ் : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, கர்நாடக மாநிலத்தார் செய்ய வேண்டிய பணிகளை நாம் இந்தச் சட்டமன்றத்தில் தயவு செய்து செய்ய வேண்டாம். அந்த விளக்கங்களையும், அதற்கான Interpretationகளையும் நாமே மீண்டும் மீண்டும் Supply செய்து நம்முடைய Case-ஐ Weak ஆக்க வேண்டாம். நேற்று முதல்வர் கேட்டுக்கொண்டதைப்போல, இந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, இந்த விவாதத்தையே அவைக் குறிப்பிலேயிருந்து நீக்கும்படியாக நான் கேட்டுக்கொள்கிறேன்.

திரு. எஸ். ஆர். இராதா : பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் அவைக்குறிப்பிலே - விவாதத்திலே இருக்கிற சில உள் பிரச்சினைகளைச் சொல்கிறார். அதை நீக்குவதிலே எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படை நோக்கத்திலே மாறவில்லை என்பதை நான் இந்த அவைக்குத் தெரிவிக்க வேண்டுமென்ற அடிப்படையிலேதான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கருத்தில் இருக்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டு மென்பதினாலே சொன்னேன். அதேபோல் இந்த அறிக்கையைத் தயார் செய்து .

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவரவர்களே, அங்கு சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் நல்லெண்ணத் துடன்தான் சென்றார்கள். அதிலே எந்த மறுப்பும் இல்லை. ஆனால், எழுதிக் கொடுத்தவர்தான் புரியாமல் எழுதிக் கொடுத்து அவர்களைச் சிக்க வைத்துவிட்டார். நான் நல்லெண்ணத்தை இப்பொழுதும் சந்தேகிக்கவே இல்லை. அவர்கள் தவறு