உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

காவிரிப் பிரச்சினை மீது

செய்தார்கள் என்று சொல்லவில்லை. எழுதிக் கொடுக்கப்பட்ட வாசகம் அவர்கள் தவறு செய்ததாக ஒரு நிலையை உருவாக்கிவிட்டது. அதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் : பேரவைத் தலைவரவர்களே, அதிலே ஒரே வார்த்தை. முதல் Sentence-ஐப் பார்த்தாலே, யார் எந்தப் பக்கமும் தவறான எண்ணத்தோடு செய்யவில்லை. ஒன்று Typing Mistake ஆக இருக்க வேண்டும். அல்லது (குறுக்கீடு) உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேன். Let me tell you. அதாவது அல்லது எந்த Ended on 1974 என்று இருக்கிறது. அப்படி ஒரு ஆங்கில வாசகமே வரமுடியாது. Ended on என்று வராது. Ended in என்று வரவேண்டும். Ended on 1974 என்பது It should be a typing mistake, or something else it has been left out.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அந்த மனுவைத் தயாரிக்கும்பொழுது கொஞ்சம் எஸ். ஆர். பி. உதவி செய்து.

மாண்புமிகு திரு. துரைமுருகன் : தலைவரவர்களே, இவ்வளவு நேரம் நாங்கள் காவிரிப் பிரச்சினைதான் புரியவில்லை என்று இருந்தோம். ஆனால் இப்பொழுது

மாண்புமிகு டாக்டர் க. அன்பழகன் : மாண்புமிகு தலைவர் அவர்களே, அதிலே இருக்கிற வார்த்தை Ended on அல்ல. Photostat-ஐ நான் பார்க்கிற பொழுது end onதான் பார்க்கிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : அதிலே இருப்பது "The period of agreement on sharing of Cauvery water between Tamil Nadu and Karnataka பிராக்கெட்டிலே (State of Mysore) என்பது, இதுவே ஆபத்தாகும்" என்று இருக்கிறது. திரு. பாலசுப்பிரமணியம் தலை குனிந்து விட்டார்.