உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

காவிரிப் பிரச்சினை மீது

நம்முடைய முதலமைச்சர் அவர்களும் அதற்கு பதில் அனுப்பியிருக்கிறார்கள். இந்த முக்கியமான பிரச்சினையினுடைய முக்கியத்துவத்தைக் கருதி தொலைபேசியில் நேரத்தை, ஒரு நாளை பிக்ஸ் செய்து இன்று மாலைக்குள் அந்தத் தேதியை அறிவிப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தெலைபேசியில் பேசினால் பிறகு அவரும் மறுக்கலாம், நாமும் மறுக்கலாம், அப்படிப் பேசவில்லை என்று. அதனால்தான் எதுவும் ரெக்கார்டட் ஆக பதிவு ஆக வேண்டும் என்ற முறையிலே அவரும் கடிதம் எழுதியிருக்கிறார் நானும் கடிதம் எழுதியிருக்கிறேன். இப்படி பேக்ஸில் அனுப்பியிருக்கிறோம் ஆதாரபூர்வமாக இது நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும். இந்தக் கடிதத்திற்குப் பிறகு அவர் நான் சொல்லியிருக்கிற 4ஆம் தேதியை தவிர ஆகஸ்டு முதல் வாரத்தில் எந்தத் தேதியென்றாலும் அவர் என்னோடு பேசலாம், நானும் அவரோடு பேசுவேன். தொலைபேசியில் பேசுவதற்கு இந்தப் பேக்ஸ் தடங்கலாக இருக்காது. பேசுவோம்.

உச்ச

திரு. ஜி. பழனிசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒவ்வோரு தடவையும் உச்ச நீதிமன்றத்தினுடைய வழிகாட்டுதலை கர்நாடக அரசு, கர்நாடகத்தினுடைய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற முதலமைச்சர்கள் மறுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மறுத்து வந்து கொண்டிருக்கிற காரணத்தால்தான் நாம் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று இருக்கிறோம். மீண்டும் இதுபோன்று மறுத்து, மறுத்து அவர்கள் மறுப்பு தெரிவித்துக் கொண்டே காலத்தைக் கடத்துவதற்கான அத்தனை நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுகிறபோது மீண்டும் நாம் நம்முடைய மத்திய அரசை அணுகி இதுபோன்ற இந்த அரசு இப்படி உச்ச நீதிமன்றத்தை மதிக்காத தன்மையில் இருக்கிறதே. பொதுவாக நடுவர் மன்றத்தினுடைய தீர்ப்பை மதிக்காத ஒரு தன்மையில் இருக்கிறதே. பாரதப் பிரதமர் அவர்கள் இதில் தலையிட்டு உடனடியாக அதற்கு நடவடிக்கை