உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

159

எடுக்கவேண்டும் என்ற ஆலோசனையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பார்களா? ஆக கர்நாடக அரசு தண்ணீர் தரும், இந்த மாதத்திற்குரிய தண்ணீர் தரும் என்று நம்பித்தான் நாம் இந்த தஞ்சை மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறோம். பொதுவாக இன்றைக்கு பயிரிடப்பட்டு இருக்கக்கூடிய, ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக விவசாயம் செய்யப்பட்டு இருக்கிற பயிர்கள்கூட கருகிப்போகக்கூடிய ஒரு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு போவார்களா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, இது காவிரிப் பிரச்சினைக்கு, ஒரு நீண்டகால, முழுமையான தீர்வுக்காக நடைபெறுகின்ற பேச்சு வார்த்தை அல்ல. நான் முதலிலேயே குறிப்பிட்டிருக்கின்றேன். அப்படிப்பட்ட பேச்சுவார்த்தை என்றால், அது நடுவர் மன்றம் என்கின்ற அந்த வட்டத்திற்குள் நடைபெற வேண்டும்; அதைக் கடந்து நடைபெறக்கூடாது என்பதை இன்று, நேற்று அல்ல; நீண்ட காலமாக நான் தெரிவித்து வந்திருக்கிறேன்.

இப்பொழுதுள்ள பிரச்சினை, குறுவை ஏற்கனவே போதுமான அளவிற்குப் பயிரிடப்பட முடியாத சூழ்நிலை. சம்பாவும் பயிரிட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடாமல் இருக்க, இந்தக் காலக்கட்டத்திலே பெறவேண்டிய தண்ணீரை எப்படிப் பெறுவது என்பதைப்பற்றிப் பேசவும் நடுவர் மன்றத்தினுடைய இடைக்கால உத்தரவை அந்த நிவாரண உத்தரவை எப்படி அமல்படுத்துவது என்பதைப் பற்றிப் பேசவும்தான். அதற்காகத்தான் உச்ச நீதிமன்றம் இரண்டு ம் பேசத் முதலமைச்சர்களு தயாரா என்பதை இன்று பிற்பகலுக்குள்ளே அறிவிக்கவேண்டுமென்று கேட்டிருக்கின்றது நாம் உச்ச நீதிமன்றத்தையும் மதித்துப் பேசத் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டதற்குக் காரணம், நம்முடைய உரிமைகளை விட்டுக்கொடுத்து என்றைக்கும் நாம் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை; அதிலே காம்ப்ரமைஸே கிடையாது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டோம்.