உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

173

தள்ளிவிட முடியாது. அவர்கள் எந்த அளவிற்கு உச்சநீதி மன்றத்திலே தங்களுடைய கருத்தை, அந்த வரைவை எடுத்துச் சொல்ல இருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொண்ட பிறகுதான் மேல் நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தக் காவிரிப் பிரச்சினையில் தற்போதைய நிலையின் சுருக்கத்தை நான் உங்களிடத்திலே எடுத்துக் கூறியிருக்கின்றேன்.

ஆனால், இன்றைக்கு ஏற்கெனவே இந்த நாட்டை ண்டவர்கள், கடந்த ஐந்தாண்டுக் காலம் ஆண்டவர்கள், காவிரிப் பிரச்சினைக்குத் துரோகம் செய்து விட்டதே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்; திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று இன்றைக்குச் சொல்லி வருவதை நாம் காணுகிறோம். அளிக்கின்ற பேட்டியானாலும், பேசுகின்ற மேடையானாலும், நிருபர்களைச் சந்திக்கின்ற நேரமானாலும் எல்லா நேரத்திலும் ஏதோ காவிரிப் பிரச்சினைக்குத் திராவிட முன்னேற்றக் கழக அரசு துரோகம் செய்துவிட்டதைப் போலப் பேசி வருகின்றார்கள்.

உங்களுக்கு நான் ஒரு உதாரணத்தை மாத்திரம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். ஏற்கெனவே ஒரு முறை கோடிட்டுக் காட்டியிருக்கிறேன். இன்றைக்கு விவரமாகவே சொல்ல விரும்புகின்றேன்.

ஜெயலலிதா அவர்கள், முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், இந்தக் காவிரிப் பிரச்சினையிலே எப்படி நடந்து கொண்டார்கள், எவ்வளவு ஆர்வத்தோடு, எவ்வளவு விரைந்து இந்தக் காவிரிப் பிரச்சினையிலே அக்கறை காட்டினார்கள் என்பதற்கு நான் இங்கே படிக்க இருக்கின்ற இந்த இரண்டு மூன்று கடிதங்களும், குறிப்பிட இருக்கின்ற தேதிகளுமே சான்று பகரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

9th June 1992. 1992 ஜூன் மாதம் 9-ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதம் வருகிறது. கடிதத்தை எழுதுபவர் சுக்லா அவர்கள். சுக்லாவை உங்களுக்குத் தெரியும். அவர், இந்த அம்மையார் உண்ணாவிரதம்