174
காவிரிப் பிரச்சினை மீது
இருந்தபொழுதுகூட வந்து சில உறுதிமொழிகளைத் தந்து, அந்த உறுதிமொழிகளின் காரணமாக உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டதே, அந்த சுக்லாதான் இந்த சுக்லா. அவர் 1992-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 9-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதுகிறார்.
"Dear Jayalalithaji,
Keeping in view the interim order of the Cauvery Water Disputes Tribunal, it is proposed to assign the responsibility of monitoring its implementation to the Central Water Commission in co-operation with the basin States. Shri Vaithialingam, Chief Minister of Pondicherry has generally agreed with this proposal. The Joint Regulation Committee to be headed by the Chief Engineer, CWC, would include representatives of the respective State Governments also. I will be obliged, if you could please communicate your concurrence with such an arrangement".
—
"உங் களுடைய ஒப்புதலை உடனடியாக உடனடியாக அதற்கு அனுப்புவீர்களேயானால் ல் நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்ற அளவிலே இந்தக் கடிதத்தை வி.சி. சுக்லா அவர்கள் 9-6-1992 அன்று எழுதுகிறார். 9-ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எப்பொழுது வைக்கப்படுகிறது என்றால், 9/6 இல் எழுதப்பட்ட கடிதம், அவருடைய பார்வைக்கு
ய
18-7-1992
அன்று வைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து என்று வைத்துக் கொள்ளுங்களேன். 18-7-1992 அன்று அவருடைய பார்வைக்கு வைக்கப்படுகிறது.
பார்வைக்கு வைக்கப்பட்டவுடன் அவசரமாக அவர்கள் முடிவு எடுத்தார்களா என்றால் 20-7-1992 அன்று காவிரி டெக்னிக்கல் செல் இருக்கிறதே அந்த டெக்னிக்கல் செல் ஒரு கடிதத்தை எழுதுகிறது யாருக்கு?
The Remarks of the Chairman, Cauvery Technical Cell, Madras on the above subject are as follows:-