கலைஞரின் சட்டமன்ற உரைகள்
175
"The Government may agree to the proposal of Governemnt of India, as indicated in the letter cited, to assign the responsibility of monitoring the implementation of the interim order of the Cauvery Water Disputes Tribunal to the Central Water Commission" என்று 20-7-1992-ல் காவிரி டெக்னிக்கல் செல், தமிழகத்திலேயுள்ள செல் முதலமைச்சருக்குத் தெரிவிக்கிறது. அல்லது அரசுக்குத் தெரிவிக்கிறது. Chief Secretary-க்கு தெரிவிக்கிறது. இப்படித் தெரிவித்த பிறகு, ஒரு ஓ. சி. காப்பி, உங்களுக்குத் தெரியும், ஓ. சி. என்றால் ஆபீஸ் காப்பி. ஒரு ஆபீஸ் காப்பி எப்படி வருகிறதென்றால், கடிதம் எழுதுவதற்காக, ஒரு ஆபீஸ் காப்பி, முதலிலே ஒரு டிராப்ட் போட்டு வருகிறது. அந்த டிராப்ட் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அதிலே கையெழுத்து இட்டு 14-12-1992, அன்று ஒப்புதல் தருகிறார். 6-ஆம் மாதம் கடிதம், 7-ஆம் மாதம் நினைவூட்டல், பிறகு 12-ஆம் மாதம், 14-12-1992 அன்று ஓ.சி. தயாராகிறது. 5 மாதம் ஆகிறது அந்த ஓ.சி.க்கே. ஓ.சி. தயாராகிறது. அந்த ஓ.சி. எப்படித் தயாராகிறது தெரியுமா? 21-7-1992-ல் பி.டபிள்யூ.டி செக்ரட்டரி கையெழுத்தைப் போட்ட ஓ.சி., அதே 21-7-1992-லே கையெழுத்துப் போட்ட அன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர், அவருடைய கையெழுத்துபோட்ட அந்த ஓ.சி. இவைகளை 14-12-1992-லேதான் முதலமைச்சர் அதை அப்ரூவ் பண்ணுகிறார். அந்த லெட்டரை அப்ரூவ் பண்ணுகிறார். அப்ரூவ் பண்ணினபிறகு, அனுப்பப்பட வேண்டிய தட்டச்சு கடிதம் வரவேண்டுமல்லவா, அந்தக் கடிதம் அவருக்கு எப்பொழுது வருகிறதென்றால் 30-3-1993. வேடிக்கை பாருங்கள். ஜூலை மாதம் 9-ஆம் தேதி சுக்லா கடிதம் எழுதுகிறார். அதற்குப் பதில் எழுத்தக்கூடிய கடிதம், பல கட்டங்களைத் தாண்டித் தாண்டித் தாண்டி, Fair Copy-க்கு 31/2 மாதம் தாமதம், ஓ.சி.க்கு 5 மாதம் தாமதம். ஓ.சி. எல்லாம் தாமதமாகத்தான் இருக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி). ஓ.சி. இல்லாமல் இருந்தால் அங்கே தாமதத்திற்கே இடம் கிடையாது. ஓ.சி.க்குப் பிறகு 30-03-1993 அடுத்தவருடம் வருகிறது, ஒருவருடம் கழித்து, ஒ,சி க்கு பிறகு Fair Copy செய்ய 31/2 மாதம் தாமதம். அதற்குப் பிறகு அம்மையார் 30-3-1993-லே, கையெழுத்து போடுகிறார்கள். அந்த அம்மையார்