உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

181

அதற்கு பதிலாக ஒகேனக்கல் தமிழ்நாட்டுப் பகுதியிலே இருக்கிறது. அங்கே தேக்கி வையுங்கள்: மின்சாரமும் அங்கே உற்பத்தி செய்து கொள்ளலாம். அந்த மின்சாரத்திலே வேண்டுமானால் கர்நாடகத்திற்கு ஓரளவு பங்குகூட தருகிறோம். எனவே, ஒகேனக்கல் திட்டம் அல்லது ராசிமால் திட்டம் - இந்தத் திட்டங்களை நிறைவேற்றுங்கள், நிச்சயமாக மேகதாதுவுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவே முடியாது என்று கூறிவிட்டேன். அவரும் ஓரளவு ஒகேனக்கல் அல்லது ராசிமால் திட்டத்தைப் பற்றிப் பரிசீலிக்கிற அளவிலேதான் எங்களிடத்தில் அன்றைக்கு ஒப்புக்கொண்டுப் பேசினார். வேடிக்கை என்னவென்றால் அப்படி பிரதமர் சொன்ன மறுநாள் - அதாவது மறுநாள் மீண்டும் கர்நாடக மாநில அரசோடு நாங்கள் பேசும்போது, முதலமைச்சரும் மற்றவர்களும் அதிகரிகளும் இருந்த அந்த நேரத்தில் நம்முடைய அதிகாரிகளும் நாங்களும் கலந்துகொண்ட நேரத்தில் மீண்டும், மேகதாதுத் திட்டத்தை வற்புறுத்தினார்கள். முடியாது என்று சொல்லிவிட்டோம். எல்லாம் முடிந்தது. ஆனால் கடைசியிலே தமிழ்நாடு அரசுதான் விலகிப் போய்விட்டது என்று சொல்வது சரியல்ல. படிப்படியாக பல பிரச்சினைகள் எங்கே தண்ணீரின் அளவை எடுப்பது, எந்த இடத்திலே அளவு செய்வது, அது மேட்டூரிலா அல்லது இன்னொரு பகுதியிலா, பட்லுகொண்டா என்கிற இடத்திலா அல்லது அதற்குக் கீழே ஒரு வியர் ஏற்படுத்தி அங்கேயா என்ற பிரச்சினைகள் எல்லாம் பேசப்பட்டன. அதிலே ஓரளவுக்கு அவர்களும் நாமும் ஒத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் எல்லாம் உருவாயிற்று. ஆனால் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் என்பதுதான் பிரச்சினை. அந்தப் பிரச்சினையிலே மேகதாதுவைக் கட்டிவிட்டால் - இன்றைக்கு வேண்டுமானால், மேகதாதுவைக் கட்டிக்கொண்டிருக்கும்போது 200 டி.எம்.சியோ 210 டி.எம்.சியோ தண்ணீர் கொடுப்பார்கள் மேகதாதுவைக்

கட்டிவிட்டப்பிறகு இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆள வருகின்றவர்கள் யாரோ நமக்குத் தெரியாது. ஆகவே, தமிழ்நாட்டு மக்களைச் சந்தியிலே விட்டுவிட்டுப்போக நாங்கள் சம்மதிக்க முடியாது என்று நான் அழுத்தந்திருத்தமாக (மேசையைத் தட்டும் ஒலி) அவர்களிடத்திலே சொன்னேன். அதற்குப் பிறகுதான் இந்தப்