உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

காவிரிப் பிரச்சினை மீது

பேச்சுவார்த்தை பயன்படாது என்று மீண்டும் உச்சநீதி மன்றத்திற்கே நாம் சென்று பேச்சுவார்த்தை பயன் அளிக்கவில்ல, உங்களுடைய தீர்ப்பை வழங்குங்கள் என்று கேட்டு, வாதாடிக் கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்திலே, நடுவர் மன்றம் வேறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு இடையிலே உச்சநீதிமன்றத்திற்குச் சென்று, உங்களுடைய உத்தரவுப்படி பேச்சுவார்த்தை நடத்தினோம். பயன் இல்லை என்று வழக்கைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்றத்திலே ஐவர் கொண்ட கான்ஸ்டிடியூஷனல் பெஞ்ச் ஒன்று அமைக்கப்பட்டு, அது இன்றைக்கு விசாரணை நடத்துகிறது. அந்த பெஞ்சில், அன்றைக்கு நான் குறிப்பிட்டதைப் போல. இந்த வழக்கை விசாரித்து மைய அரசு நிலையை கேட்டு அறிந்து மைய அரசின் சார்பாக 'அட்டர்னி ஜெனரல் ஆப் இந்தியா’ 8 வார கால அளவிற்குள் நடுவர் நீதிமன்றம் கொடுத்த இடைக்கால ஆணையை நிறைவேற்றுவதற்கு வரைவுத் திட்டம் தருவதாக உச்சநீதிமன்றத்திலே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுதே 2 வாரம் ஆகிவிட்டது என்று கருதுகின்றேன்; இன்னும் 5. 6 வாரம்தான் பாக்கி இருக்கிறது. அவர்கள் என்ன வரைவுத் திட்டத்தை கொடுக்கப் போகிறார்கள் என்பதை எல்லாம் பார்த்திருந்து, அதற்குப்பிறகு நமக்கு நீதி கிடைத்தும், அதை நிறைவேற்றுகின்ற நிலை ஏற்படாமல் போகுமேயானால் நாம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்ற அந்தப் பழமொழியை ஞாபகத்திலே வைத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு வழி இல்லை; ஆனால் நிச்சயமாக நியாயமான தீர்ப்பு நமக்குச் சாதகமான தீர்ப்பு- அல்லது அவர்களுக்க பாதகமான தீர்ப்பு என்று சொல்லமாட்டேன் - நடுநிலையான தீர்ப்பு கர்நாடக மாநில மக்களுக்கும் பாதகம் இல்லாமல் தமிழ்நாட்டிலே உள்ள மக்களுக்கும் பாதகம் இல்லாமல், அங்குள்ள விவசாயிகளுக்கும் இங்குள்ள விவசாயிகளுக்கும் பாதகம் இல்லாமல் ஒரு நடுநிலையான தீர்ப்பு வழங்கப்படும் என்றே நான் எதிர்பார்க்கின்றேன்.

இதற்கிடையிலே தேவை இல்லாமல், இரண்டு மாநிலங் களுக்கு இடையே சர்ச்சையை உருவாக்குகின்ற வகையில்,