இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
198
காவிரிப் பிரச்சினை மீது
போராட வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேனே தவிர, அவரை இழித்தும், பழித்தும் பேசுவதற்காகச் சொல்லவில்லை. ஏன் என்றால் தமிழ்நட்டு மக்களுக்கு அவர்கள் அக்கறையோடு செய்ய வேண்டும். எனக்குள்ள சந்தேகம் எல்லாம் நடுவர்மன்றம் நான் கேட்டபோது அம்மையார் ஒருமுறை சொன்னார்கள்; அப்படியே நடுவர்மன்றம் கொடுத்தாலும்கூட அதற்குக் கட்டுப்படவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஒன்றும் விதியில்லை என்று ஒருமுறை அம்மையார் சொன்னார்கள். அதையெல்லாம் நினைத்தால் பயமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உணர்வோடு இதை அணுகினால் நம்முடைய பிரச்சினை நல்லமுறையில் தீருமா என்ற அச்சம் ஏற்படுகிறதே தவிர வேறு அல்ல.