கலைஞரின் சட்டமன்ற உரைகள்
199
உரை : 26 :
நாள் : 15.04.1998
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவரவர்களே, திரு. பழனிசாமி அவர்கள் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவந்துள்ள இந்தப் பிரச்சினை மிக முக்கியமான பிரச்சினை என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. ஆனால், இதுபற்றி இந்த மன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய நிதிநிலை அறிக்கை தொடர்பாகப் பொது விவாதம் நடைபெற்று, அப்போது நான் உரை நிகழ்த்தியபோதும், ஆளுநர் உரை தொடர்பாக நான் உரை நிகழ்த்தியபோதும், இந்தப் பிரச்சினை பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கின்றேன்.
இந்தத் தேசிய நதிநீர்க் கொள்கை என்பது புறக்கணிக்கப் படக்கூடிய ஒன்று அல்ல. ஆனால் அந்தக் கொள்கையையும், காவிரிப் பிரச்சினையையும் இப்போது முடிச்சுப்போட்டு, அந்தக் காள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தால், காவிரிப் பிரச்சினையைத் தள்ளிப்போடுவோம் என்ற கருத்தை நாம் ஏற்பதற்கில்லை; இதை மிகத் தெளிவாகப் பலமுறை, நாம் விளக்கியிருக்கின்றோம். உச்சநீதிமன்றம் இதுபற்றி விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது. இடையிலே உச்சநீதிமன்றம் தந்த ஒரு கருத்தின் அடிப்படையிலேதான் மீண்டும் ஒருமுறை கர்நாடக முதலமைச்சரோடு நான் பேசுவதற்கு ஒத்துக்கொண்டு 4. 5 தடவை பேசிப் பார்த்து, அதிலே ஒரு முடிவு கிடைக்காத காரணத்தினால், அதைப் பற்றி உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சொல்லி, பிரச்சினையை நீதிமன்றத்திற்கே விட்டுவிட்டோம். பிறகு உச்சநீதிமன்றம் மத்திய அரசிலேயிருந்து ஒரு கருத்தைப் பெற்றது. மத்திய அரசு வகுத்துக் கொடுத்த அந்த கருத்து மாநில அரசுகளுடைய கருத்துக்கு உடன்பட்டதா அல்லவா என்பதை