32
காவிரிப் பிரச்சினை மீது
முழுமையையும் தமிழக அரசுக்கு அளிக்க வேண்டும். அணை கட்டுவதில் வேலை தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்பதாகத் தமிழகத்தின் பாசனத்திற்குத் தண்ணீர் வருகிற அளவு பாதிக்கப்படக்கூடாது என்கிற நோக்கத்தில் அமைந்துள்ள ஷரத்துக்கள் அடங்கிய அந்த ஒப்பந்தங்கள் மீறப்படக்கூடிய சூழ்நிலை இருக்கிற தென்பது தமிழகத்திற்கு அதிர்ச்சி தருகின்றது.
இதில் ஹேமாவதி அணை கட்ட வேண்டுமென்று 1964-ம்
ஆண்டு மைசூர் அரசால் தயாரிக்கப்பட்டு
அது வெளியிடப்பட்டது. அந்தத் திட்ட அறிக்கையை மைசூர் அரசு பெற்றுக்கொண்ட பிறகு 1968-ல் ஹேமாவதி அணைக்கான அடிக்கல் நாட்டு விழாவினை மைசூர் மாநில முதல்வர் அவர்கள் நடத்தி வைத்தார்கள். அந்தச் செய்தி தமிழக அரசுக்குக் கிட்டியதும் உடனேயே தன் மறுப்பை வெளியிட்டதோடு மாத்திரம் அல்லாமல் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நல்ல தீர்வினைக் காணவேண்டுமென்று 1968-ஆம் ஆண்டில் மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டது.
அப்படிக் கேட்டுக் கொண்டதற்கேற்ப, மத்திய அரசு 1968-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் தமிழ்நாட்டு அரசுக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தோடு இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணுகிற வரையில் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று மைசூருக்கு மத்திய அரசு தெரிவித்திருக்கிறது என அந்தக் கடிதத்திலே மத்திய அரசு நமக்குக் குறிப்பிட் டிருந்தார்கள். இதற்கிடையிலே கபினி நதியில் 1959-ஆம் ஆண்டு 21/2 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறிய அணை கட்டுவதற்கான ஒப்புதலைப் பெற்று, அப்படி 21/2 கோடி ரூபாய் செலவில் கட்டுவதாக இருந்த அணையை இப்போது 25 கோடி ரூபாய் அணைத் திட்டமாக மாற்றி அந்த வேலையையும் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். கபினி மாத்திரமல்லாமல், சொர்ணவதியில் ஒரு அணைக்கட்டுத் திட்டத்தை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். குடகு பகுதியில் லட்சுமணதீர்த்தம் நதியிலும் ஒரு அணைக்கட்டுத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஆக, கபினி, ஹாரங்கி, சொர்ணவதி, இன்றும் வேறுபல உபநதிகள் காவிரியோடு கலக்கிற உப நதிகளிலேயெல்லாம் பாசனத்