உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

33

திட்டங்களுக்காக அணைக்கட்டுத் திட்டங்களை அவர்கள் இன்றைக்குத் தொடங்கி அந்த வேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலே இந்த லட்சுமணதீர்த்தம் என்ற நதி குடகு தனி மாநிலமாக இருந்தபோது அந்தத் தனி மாநிலமான குடகிலே இந்த லட்சுமண தீர்த்தம் நதியில் ஒரு அணை கட்டுவதாக 1943-ம் ஆண்டு முயற்சி எடுத்துக் கொண்டது. அப்படி குடகு மாநிலத்தில் லட்சுமண தீர்த்தம் அணை கட்டப்படுமானால் மைசூர் மாநிலம் பாதிக்கப்படும் என்று மைசூர் அரசு ஆட்சேபம் தெரிவித்தது. அந்த ஆட்சேபத்தை முன்னிட்டு அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு குடகு மாநிலத்தில் மைசூருக்கு விரோதமாக மைசூரினுடைய பாசனத்தை பாதிக்கக்கூடிய அளவிலே லட்சுமண தீர்த்தத்தில் கட்டுவதாக இருந்த அணையைக் கட்டுவது கூடாது என்று அதைத் தடுத்து விட்டார்கள். அப்படிப்பட்ட குடகு மாநிலம் இன்றைக்கு மைசூர் மாநிலத்தோடு இணைக்கப்பட்டு விட்டது. அவர்கள் ஹரங்கி அணைக்கட்டு திட்டத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, அவர்களுடைய மாநிலம் பாதிக்கப்படும் என்பதற்காக அவர்களுக்கு மேலே உள்ள குடகு தனி மாநிலமாக இருந்த நேரத்தில் அங்கே கட்டப்பட இருந்த லட்சுமண தீர்த்தம் அணைக்கட்டைத் தடுப்பதற்கு மைசூர் அரசுக்கு உரிமை இருந்தது. அதே அடிப்படையில்தான் இன்றைக்கு நம்முடைய மாநிலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நம்முடைய பரம்பரை பாத்தியதைகள், நம்முடைய உரிமைகள், நம்முடைய பாசன வசதிகள் இவைகளுக்காக 1892-ம் ஆண்டு 1924-ம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி நமக்குத் தரவேண்டிய லிமிட் ஃப்ளோ குறையக்கூடாது என்பதற்காகத் தான் இன்றைக்கு மைசூர் அரசு கட்டுகிற ஹேமாவதி, கபினி, ஹரங்கி, சொர்ணவதி போன்ற அணைக்கட்டுத் திட்டங்களை இன்றைக்கு ஆட்சேபிக்கிறோம்.

கு

இதையே பலமுறை சட்டப் பேரவையில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இந்த அணை கட்டுவதையே நாம் மறுக்கிறோம் என்பதல்ல பொருள். இந்த அணைகளை அவர்கள் கட்டுவதானால் அதற்கான விவரங்கள் நமக்குத் தரப்பட்டாக