கலைஞரின் சட்டமன்ற உரைகள்
49
அழைத்துப்போய் அந்தப் புல் பூண்டுகளைக் காட்டி, அதைச் செதுக்க அனுமதி தரவேண்டும் என்று கேட்டு, நான்கைந்து கடிதம் எழுதி, ஞாபகப்படுத்தி, "புல்பூண்டுகளைச் செதுக்க அனுமதி கொடுத்தோம் போ” என்று அவர்கள் அனுமதி அளித்த பிறகுதான் புல்பூண்டுகள் இப்போது செதுக்கப்பட்டு, கண்ணைக் கவரும் வண்ண மலர்கள் கொண்ட பூங்கா தோன்றிக் கொண்டிருக்கின்றது என்கிற நிகழ்ச்சியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அளவுக்கு மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு பணிந்து நடக்கிறோம். அடங்கி நடக்கிறோம். அடக்க உணர்ச்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் 25 கோடி, 30 கோடி என்பதாக ஹேமாவதி, கபினி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகிய பல்வேறு அணைக்கட்டுத் திட்டங்களை, தமிழ் நாட்டைப் பாலைவனம் ஆக்கக்கூடிய பயங்கரமான திட்டங்களை மைசூர் அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாமலே, மத்திய அரசின் சிபார்சின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் செய்கிறார்கள் என்றால் நாட்டு நிலைமை என்ன?
பாலாறு மைசூர் அணைக்கட்டால் பாழாய்ப் போய்விட்டதை மறந்துவிடக்கூடாது. ராணிப்பேட்டில் பாலாறு படுகை ஓரத்தில் 9 லட்சம் மரங்கள் இருந்தன என்று கணக்கிட்டு, நடந்த மகாயுத்தத்தின்போது 3 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு விறகாகக் கொடுக்கப்பட்டன என்றெல்லாம் சரித்திரம் படித்தவர்கள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாலாறு இன்றையதினம் மாறியிருக்கிறது.
பாழாறாக
காவிரியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறபோது பலபேருக்கு இது எவ்வளவு பயங்கரமான பிரச்சினை என்று புரியாமல் இருக்கலாம். அதன் உண்மைத் தத்துவம் தெரியாமல் இருக்கலாம். பாலாறை எண்ணிப் பாருங்கள். அதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காலம் ஒன்றுண்டு. இன்றைக்கு வெறும் மணல் வெளியாகக் கிடப்பதைப் பார்க்கிறோம். அதைப்போல இன்றைக்கு மைசூர் அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறபடி அணைக் கட்டுகளை எல்லாம் கட்டிவிட்டால் சகாரா பாலைவனத்தைப் போல காவிரி நதியும் மணல் ஆறாகப் போய்விடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
3 - க.ச.உ. (கா.பி)