கலைஞரின் சட்டமன்ற உரைகள்
55
முடியும், அப்படிச் செய்ய முடியும். நாம் ஏன் பொறுமையைக் காட்டுகிறோம்? இந்தியா ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடாதே, ஒருமைப்பாடு கெட்டுவிடக்கூடாதே, மைசூர் மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும் வன்மையான போர் ஏற்பட்டு விடக்கூடாதே என்பதால்தான் நாம் இவ்வளவு பொறுமை காட்டுகிறோம்.
மைசூர் மாநிலத்தில் மக்கள் ஏற்றுக்கொள்கிற வகையில் விஷயங்கள் விளக்கிச் சொல்லப்படாத காரணத்தால்தான் சில உணர்வுகள் மைசூர் மாநில மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். மைசூரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசு இன்றைக்கு இல்லாவிட்டாலும் இந்திரா காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், மற்ற கட்சிகள் எல்லாம் ஒருங்குகூடி 1924-ம் ஆண்டு ஒப்பந்தம், 1892-ம் ஆண்டு ஒப்பந்தம் இருக்கிறது. எந்தெந்த அளவுக்கு நாம் கட்டுப்பட்டிருக்கிறோம்? 1964-ல் ஹேமாவதி அணைக் கட்டுவதற்கான உடனடியாக தயாரித்த அறிக்கை என்ன என்பவற்றையெல்லாம் மைசூர் மக்களிடத்தில் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? மைசூர் மாநிலத்தில் உள்ளவர்களை அரசியல் வியாதிகளுக்குப் பயன்படுத்துகிற காரணத்தால் அம்மக்களுக்கு தமிழகத்தைப் பற்றியும், தமிழ்நாட்டு கட்சிகளைப் பற்றியும், தமிழக மக்களைப் பற்றியும் கசப்பான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. தயவுசெய்து கர்நாடக மக்கள் மைசூர் மாநில மக்கள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அனைவரையும் மிகுந்த பணிவோடு கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்,
-
நம் முன்னால் வைத்திருக்கின்ற தீர்மானத்தை நாளை மறுநாள் டெல்லிக்கு அனுப்ப இருக்கிறோம். இதுவரையில் நம் எண்ணங்களை நம்முடைய வேண்டுகோளை அலட்சியப் படுத்தியதுபோல் அல்லாமல், காலங்கடத்தியதுபோல் அல்லாமல் மிகுந்த பரிவோடும், பெருமிதத்தோடும் உணர்ந்து இந்திய சர்க்கார் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே. எல். ராவ் அவர்களும், மத்திய அமைச்சர்களும் இன்னும் மைசூரிலிருந்து வந்து மத்திய அமைச்சர்களாக இருக்கிறவர்களும் நன்கு ஆராய்ந்தறிந்து, தமிழகத்திற்குப் பாதகம் ஏற்படாத அளவில் முடிவை எடுத்து அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன். இன்னும் அவர்களிடமிருந்து