உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

காவிரிப் பிரச்சினை மீது

நமக்குச் சாதகமான பதிலை, “நடுவர் தீர்ப்புக்கு விடப்படும்” என்ற பதிலை எதிர்பார்க்கிறேன்.

அந்தக் காரணத்தினால்தான் நண்பர்கள் எல்லாம் பேசிய கோபத்தை, ஆத்திரத்தை, வெடிகுண்டு வைத்து தகர்த்தெறிவோம் என்பவைகளையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அந்த முறைக்கு நாம் ஏற்றவர்கள் அல்ல. தமிழ்நாட்டு மக்கள் காட்டுமிராண்டிகளாக ஆகிவிடக்கூடிய அளவுக்கு அவை போய்விடக்கூடாது. தமிழ்நாட்டு மக்கள் வேதனைப் புழுதியில் எறியப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த முயற்சிகளை எடுத்துக் கொள்கிறேன். எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள். எங்கள் அடக்கத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். எங்களுடைய பண்பை பரிகாசத்திற்கு உட்படுத்தாதீர்கள். மத்திய அரசிடமிருந்து நல்ல முடிவினை, நல்லவிதமான தீர்ப்பினை, தமிழ்நாடு எதிர்பார்க்கிறது என்று கூறி, வழிமொழிந்து பேசிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மன்றத்தின் சார்பில் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு என் உரையை முடிக்கிறேன்.