கலைஞரின் சட்டமன்ற உரைகள்
57
உரை : 5 : 5
நாள் : 09.07.1971
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக இந்த மேலவை இன்றைய தினம் கூட்டப்பட்டிருக்கிறது. காவிரி ஆற்றில் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய உரிமை பறிபோகாமல் தடுக்கப்பட வேண்டுமென்பதற்காகத் தமிழக அரசு அனைத்துக் கட்சிகளின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு தடவைகளில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து ஆலோசித்து, மைசூர் அரசோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி, அந்தப் பேச்சுவார்த்தைகள் உரிய பயன் அளிக்காத காரணத்தால், இங்கே இறுதியாகக் கூடிய அனைத்துக் கட்சி தலைவர் மாநாட்டில் மூன்று முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதிலே முதலாவது தமிழ்நாடெங்கும் மத்திய அரசு இந்தக் காவிரி நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினையை உடனடியாக நடுவர் தீர்ப்புக்கு விடாமல் காலம் தாழ்த்துவதைக் குறித்து தமிழ்நாட்டினுடைய கண்டனத்தைத் தெரிவிப்பதற்காகக் கண்டனக் கூட்டங்கள் நடத்துவதென்பதாகும். அதற்கேற்ப நாடெங்கும் எழுச்சி மிக்கதும், உணர்ச்சி மிக்கதுமான கண்டனக் கூட்டங்கள் நடைபெற்று முடிவுற்றன. அடுத்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்திற்குச் சென்றிருக்கிற எல்லாக் கட்சிகளையும் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தலைமை அமைச்சர் திருமதி இந்திரா காந்தியினுடைய இல்லத்திற்கு ஊர்வலமாகச் சென் தமிழ்நாட்டினுடைய குரலை அங்கே எதிரொலிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் உடனடியாக ஒரு தீர்ப்பு கொடுக்க வேண்டுமென்று தலைமை அமைச்சரைக் கேட்டுக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த முடிவின்படி அவர்கள் அந்த ஊர்வலத்தை நடத்தி மகஜர் ஒன்றையும் இந்திய முதலமைச்சர் அவர்களிடம் கொடுத்தார்கள். மூன்றாவதாகச் செய்த
று