58
காவிரிப் பிரச்சினை மீது
முடிவு அதைப்பற்றிச் சட்டமன்றப் பேரவையிலும் இந்த மேலவையிலும் தீர்மானங்கள் நிறைவேற்று வதென்பதாகும். அந்த
வின்படி நேற்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, இப்பொழுது மேலவையில் அந்தத் தீர்மானத்தை தலைவர் அவர்களுடைய அனுமதியோடு முன்மொழிகிறேன்.
-
'தமிழ்நாடு மைசூர் அரசுகளுக்கிடையே 1892, 1924-ஆம் ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் விதிகள் அனைத்தையும் மீறி மைசூரில் ஹேமாவதி, கபினி, ஹாரங்கி, சொர்ணவதி அணைத்திட்டங்களையும் வேறு சில முக்கிய அணைத்திட்டங்களையும் அவைகளுக்கான திட்ட விவரங்களைப் பற்றித் தமிழ்நாடு அரசுக்கு மைசூர் அரசு முறைப்படி முன்னதாக அறிவித்து, தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் பெறாமலும், இந்திய அரசின் அனுமதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளாமலும், இதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேரிடுவது பற்றிப் பொருட்படுத்தாமலும் தன் போக்கில் நிறைவேற்றிவருவது குறித்து இம்மேலவை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
காவிரி ஆற்றின் கீழ் பகுதிகளில் உள்ள உழவர் பெருமக்களின் பாசன உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தைக் கருதி 1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக் கிடையிலான நீர்த்தகராறுகள் சட்டத்தின் கீழ் முறையாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் ஒன்றிற்குக் காவிரி நீர்த் தகராறு தீர்ப்புக்கு விடுமாறு தமிழ்நாடு அரசு 1970 பிப்ரவரி திங்களிலேயே இந்திய அரசைக் கேட்டுக் கொண்டிருந்துங்கூட, தமிழ்நாட்டிற்குத் தொன்றுதொட்டு ஏற்பட்டு வந்துள்ள பரம்பரைப் பாசன உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் இந்திய அரசு தமிழ் நாட்டின் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத இப்பிரச்சினை குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அளவு கடந்து கால தாமதம் செய்துவருவதைக் கண்டு இம்மன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது
இதில் இந்திய அரசு மேலும் காலந்தாழ்த்தினால் மைசூர் அரசு தனது திட்டங்களை விரைவுபடுத்தி அவற்றைக் கட்டி முடிக்கும் விரும்பத்தகாத விபரீத நிலை உருவாவதற்கே அது