உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

59

வழிகோலுமென்றும் அதனால் பன்னெடுங்காலமாகத் தமிழ்நாடு அனுபவித்து வந்த பாசன உரிமைகள் பறிபோய் விடும் என்றும் இம்மேலவை பெரிதும் அஞ்சுகிறது.

வேதனைமிக்க இத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசு 1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான நீர்த் தகராறுகள் சட்டத்தின் கீழ் நடுவர் மன்றம் ஒன்றை அமைத்து, இத் தகராறு களுக்குத் தொடர்புள்ள தரப்பினர் அனைவருடைய நலன்களையும் கருதி தமிழக அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளபடி காவிரி நீர்த் தகராறை அம்மன்றத்தின் தீர்ப்பிற்கு விட்டு நியாயம் வழங்குமாறும், நடுவர் மன்றம் இத்தகராறு குறித்து ஆய்ந்து முடிவு செய்து தனது தீர்ப்பை அளிக்கும் வரையில் மைசூர் அரசு தன் போக்கில் மேற்கொண்டுள்ள இத்திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றக் கூடாதென அதற்கான கட்டளையிடுமாறும் இந்திய அரசை இம்மேலவை வலியுறுத்துகிறது'.

ம்

தலைவர் அவர்களே, இந்தப் பிரச்சினை குறித்து நாம் பல்வேறு நேரங்களிலே விவாதித்திருக்கிறோம் என்றாலும், நம்முடைய உணர்வுகளை மைசூர் அரசுக்கும், மத்திய அரசுக்கும் புலப்படுத்தியிருந்தும், இதற்கென்று சட்டமன்றப் பேரவையிலும் மேலவையிலும் தீர்மானங்கள் போடுகின்ற அளவுக்கு நிலைமை உருவாகிவிட்டதற்காக உள்ளபடியே நாம் வருந்தாமல் இருக்க முடியாது. இந்தப் பிரச்சினை 1968-ஆம் ஆண்டிலிருந்து விரிவடைந்திருக்கின்றது. மைசூரில் ஹேமாவதி அணையைக் கட்டுவதற்கான திட்டங்களை, அறிக்கைகளை மைசூர் அரசு 1964ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே தயாரிக்கத் தொடங்கி 1964-ஆம் ஆண்டு அந்தத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 1968-ல் மைசூர் முதலமைச்சர் மாண்புமிகு திரு. வீரேந்திர பட்டீல் அவர்கள் ஹேமாவதி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவினை மைசூரிலே நடத்தினார். அதற்குப் பிறகு தமிழகம் தன்னுடைய மறுப்பைத் தெரிவிக்க வேண்டிய கட்டத்திலும், மத்திய அரசினுடைய உடனடி உதவியை நாட வேண்டிய கட்டத்திலும் வந்தது என்பதிலே யாருக்கும் எந்தவித ஐயமும் இருக்காது என்றே நான் நம்புகிறேன். காவிரி நதியைப் பொறுத்த வரையில், அது மைசூரில் குடகுப் பகுதியிலே உற்பத்தியாகி காவிரிப்பூம்பட்டணத்திலே வந்து சேருகின்ற வரையில் கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் நீளமுடைய ஒரு நதியாக