கலைஞரின் சட்டமன்ற உரைகள்
̄
63
அதற்குப் பிறகு 1967-ஆம் ஆண்டில் நம்முடைய தமிழகத்தி னுடைய பொறியாளரும், மைசூர் மாநிலத்தினுடைய பொறியாளரும், மத்திய அரசினுடைய நீர்ப்பாசனத் தலைமைப் பொறியாளரும் ஒருங்கு கூடி இந்த அணைகள் கட்டும் சம்பந்தமாக ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். மைசூர் மாநிலத்தின் நீர்ப்பாசனத்துறையின் பொறியாளரும். தமிழ் நாட்டுப் பொறியாளரும் உறுப்பினராகவும், மத்திய அரசினுடைய நீர்ப்பாசனத் தலைமைப் பொறியாளரைத் தலைவராகவும் கொண்டு அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. அதிலே விவரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
"The Chief Engineer, Mysore, explained that the Mysore Gov- ernment was fully prepared to honour the 1924 agreement and that the limit flows guaranteed therein would not, in any way, be affected by the Hemavathi Project."
இதிலே அந்த மூன்று பொறியாளரும் கையெழுத்திட்டிருக் கிறார்கள். 1964-லே அந்தத் திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில், 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் எங்கள் கவனத்தில் இருக்கும். அதன்படி இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அடிப்படையிலேதான் அறிக்கையைத் தயாரித்தார்கள். அதற்குப் பிறகு 1967-ம் ஆண்டு பொறியாளர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேதான் 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். அதற்கு மாறாக இந்தத் திட்டம் அமையாது என்று ஒப்புக்கொண்டார்கள். பிறகு திடீரென்று மைசூர் சட்டமன்றம் கூடிய நேரத்திலே மைசூரின் முதலமைச்சர் திரு. வீரேந்திர பட்டீல் பேசும்பொழுது, நான் 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை என் என்று அறிவித்தார்கள். அதற்குப் பிறகு மத்திய அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் மாண்புமிக்க கே. எல். ராவ் அவர்கள் 1968-லே டெல்லியிலே ஒரு மாநாட்டைக் ஒரு மாநாட்டைக் கூட்ட, அப்பொழுது முதலமைச்சர் பதவியை ஏற்றிருந்தாலும், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த திரு. வீரேந்திர பட்டீல் அவர்கள் அந்த மாநாட்டுக்கு வந்து, இருவரும் நீண்டநேரம் விவாதித்த பிறகு, அவர்கள் எங்களிடத்திலே 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று வாயளவிலே கூறிவிட்டுச்