உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

காவிரிப் பிரச்சினை மீது

சென்றார்கள். அப்படிச் சென்ற பிறகு, மறுபடியும் மைசூர் சட்டமன்றத்திலே, "நீங்கள் 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று வாயளவிலே கூறியிருக்கிறீர்களே என்று கேட்டதும், திரு. வீரேந்திர பட்டீல் “யார் சொன்னது, நான் ஒப்புக்கொள்ளவில்லை" என்று மைசூர் சட்டமன்றத்திலே மீண்டும் ஒருமுறை அறிவித்தார். இவைகளை எல்லாம் தொடர்ந்து நாள் ஏடுகளைப் பார்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அவர்களே 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள

ஒன்று, நியாயம் வழங்கக்கூடிய ஒன்று என்று புரிந்து, தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும், என்ன அரசியல் காழ்ப்புகள் காரணமோ, வேறுபாடுகள் காரணமோ, அல்லது அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட பெரிய தொல்லைகள் காரணமோ, அது நமக்குத் தெரியாது, அது தமிழ் நாட்டினுடைய எதிர்காலத்தின் வாழ்விலே கை வைக்கும் அளவிலே நிலைமை முற்றிப்போயிருக்கிறது. இப்படி முற்றிவிட்ட நிலைமையிலேதான் நாம் மத்திய அரசினிடம் கேட்டுக்கொண்டோம், நீங்கள் உடனடியாகத் தலையிட வேண்டுமென்று. மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலமாக இதைத் தீர்த்துவிடலாம் என்று நம்மிடம் வலியுறுத்தினார்கள். நாம் அதிலே அவர்கள் யோசனையை மறுக்க விரும்பவில்லை. சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடைபெற, நாம் விரும்புகின்ற மைசூர் மாநில மக்கள் தமிழ்நாட்டு பெருங்குடி மக்கள் இருவருை ருவருடைய நல்லுணர்வுகள் பாதிக்கப் படாமலிருப்பதற்கு இந்தப் பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருக்குமானால் அதிலே இணக்கம் தெரிவித்து, நாம் பல கட்டங்களிலே பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியாகப் பேச்சுவார்த்தை முறிந்துபோய்விட்டது என்று மத்திய அமைச்சர் கே. எல். ராவ் அவர்கள் பத்திரிகையாளர்களிடத்திலே விரிவாகப் பிரகடனப்படுத்தியபோது, தமிழ் நாடு அரசின் சார்பிலே இந்தப் பிரச்சினையை “நடுவர் தீர்ப்பிற்கு” விடுவதைத் தவிர, வேறு வழியில்லை என்று நாம் எடுத்துச்சொன்னோம். ஹேமாவதியை விட, கபினியை உள்ளடக்கிய பிரச்சினை கபினி ஆற்றிலே கட்டப்படும் அணைக்கட்டுப் பிரச்சினை, மிகப் பெரிய பிரச்சினை. 1959-ம் ஆண்டு கபினியிலே ஒரு சிறு அணையைக் கட்ட 21/2 கோடி ரூபாய்த் திட்டத்திற்கு அவர்கள் அனுமதியைப்