உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

65

பெற்றிருந்தார்கள். இன்றைக்கு 21/2 கோடிக்கு பதிலாக 25 கோடி ரூபாயைச் செலவழித்து பெரிய அணையாகக் கட்டவிருக் கிறார்கள். இதற்குக் கேரள அரசும் தன்னுடைய மறுப்பைத் தெரிவித்திருக்கிறது. எனவே, தொடர்புடைய அரசினுடைய மன நிறைவு ஏற்படத்தக்க வகையிலே இதை “நடுவர் தீர்ப்பிற்கு” விடுவதைத் தவிர, வேறு வழியில்லை என்று நாம் மத்திய சர்க்காருக்கு எடுத்துச்சொல்லி மாதங்கள் 18 உருண்டோடி விட்டன. ஆனால், மத்திய அரசு இதுவரையில் தக்க கவனம் இதிலே செலுத்திவிடக் காணோம். ஆகவேதான் மத்திய அரசு கடைப்பிடித்து வருகின்ற மந்தப் போக்கிலேயிருந்து விடுபட வேண்டும் என்றும், அவர்கள் உடனடியாக இதிலே சிரத்தை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றும் நாம் இந்த முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறோம். அதிலே நேற்றைய தினம் முதல் கட்டமாகச் சட்டப் பேரவையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்பொழுது மேலவையிலே இந்தத் தீர்மானம் உங்கள் முன்னிலையிலே வைக்கப்பட்டிருக்கிறது. இதிலே கட்சி கட்சி மாச்சரியங்களுக்கு இடமில்லை.

கட்சி

வேறுபாடுகளுக்கு இடமில்லை. எல்லாக் கட்சிக்காரர்களும் செந்தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்கள் என்கின்ற அடிப்படையிலே தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்ற இந்தப் புதிய, பயங்கரமான ஆபத்தைத் தடுத்து நிறுத்துகின்ற அளவிலே ஒன்றுகூடி யிருக்கிறோம் என்று உணர வேண்டும். எனவே, இதிலே இந்த அரசு எடுக்கும் முயற்சிகளிலே ஒத்துழைக்கின்ற அனைத்துக் கட்சிக்காரர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து, இந்தத் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இறுதியாக ஏதாவது சொல்ல வேண்டுமானால், சொல்லுகிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு : தலைவரவர்களே, இந்தத் தீர்மானத்தைக் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், மாற்றும் கட்சித் தலைவர்களும், மாண்புமிகு மேலவை உறுப்பினர்களும் தங்களுடைய ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் எந்தெந்த வகையிலே அமைய வேண்டுமென்பதனையும், அடுத்தபடி மத்திய அரசு உடனடியாக இந்தக் காரியத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதை மேலும் ஒருமுறை வலியுறுத்தித் தீர்மானத்தை வழிமொழிந்ததற்காக நான் அவர்களுக்கெல்லாம் என்னுடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.