உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

காவிரிப் பிரச்சினை மீது

இதிலே நான் மிகப் பொறுமையாகவிருந்தேன் என்பதைப் பாராட்டியும் இனிமேலும் அந்தப் பொறுமை தேவையில்லை என்கிற அளவுக்கு எனக்கு அறிவுரை கூறியும் எதிர்க்கட்சித் தலைவரவர்களு ம் மற்ற உறுப்பினர்களும் இங்கே பேசியிருக்கிறார்கள். இதிலே நான் பொறுமை காட்டுவதற்கு மிக இன்றியமையாத காரணம் இதுதான். இந்தப் பிரச்சினை மைசூர் மாநிலத்திலிருக்கின்ற மக்களுக்கும் தமிழ் நாட்டிலிருக்கின்ற மக்களுக்கும் ஒரு பகை உணர்ச்சியை உருவாக்கி விடக்கூடாதென்பதாலும், இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்திருக்கின்ற காரணத்தாலும் அதற்கு ஊனம் ஏற்பட்டு விடக்கூடாதென்பதாலும்தான் நாம் இதிலே மிகுந்த அக்கறையோடு, நிதானத்தோடு, பொறுமையோடு பல மாத காலமாக வலியுறுத்தி வருகிறோம். பதினெட்டு மாதகாலமாக நடுவர் தீர்ப்புக்கு இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வரும், ஒரு வாரத்தில் அறிவிப்பு வரும் என்று காத்துக் கிடந்து, காத்துக் கிடந்து மாதங்கள் உருண்டோடின என்பதைத் தவிர உற்ற பயன் நமக்குக் கிடைக்கவில்லை, அந்த வேதனையான நிலைமையோடுதான் நாம் இந்தப் பிரச்சினையை இன்றைய தினம் அணுகுகிறோம். வேதனை எற்படுகிற நேரத்தில் உணர்ச்சிகள் பொங்குவதும், அந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளை அடக்கமுடியாமல் வார்த்தைகள் வெளிப்படுவதும் சகஜம். அப்படி வெளிப்படும் வார்த்தைகள் மறுபடியும் எடுத்து உட்கொள்ளக் கூடியவைகளல்ல என்ற காரணத்தால் அந்த வார்த்தைகளிலே நாம் காட்ட வேண்டிய நிதானம், பொறுப்பிலிருக்கிறவர்களுக்கு மிக முக்கியமானது. அந்த எண்ணத்தால்தான் குறிப்பாக மைசூர் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் அல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கின்ற ற இந்தப் பிரச்சினையில் மைசூர் மாநிலத்தினுடைய மக்கள் மனம் புண்பட்டுவிடக்கூடா தென்பதற்காகத்தான் நாம் இதிலே அளவு கடந்த பொறுமையைக் காட்டி வருகிறோம், மிகப் பொறுப்புணர்ச்சியோடு நாம் பிரச்சினையை அணுகுகிறோம் என்பதை, மாண்புமிகு உறுப்பினர்களும் மைசூர் மாநில மக்களும் புரிந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். கர்நாடக மக்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் நீண்ட காலமாக உறவு உண்டு, அந்த