உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

67

உறவினை வலுப்படுத்துகின்ற வகையில் காவிரி ஆறு இரண்டு உறவை இணைக்கின்ற ஒரு நல்ல சங்கிலியாகவும் இருந்திருக்கின்றது. அந்த உறவை இன்று துண்டித்து விடுகின்ற நிலைமையிலே காவிரிப் பிரச்சினை ஆகிவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு கண்ணுங்கருத்துமாக இருக்கின்றது. இந்த அவையிலே இருக்கின்ற பலருக்கு, தமிழ் நாட்டு மக்கள் பலருக்கு இன்று மைசூர் மாநிலத்திலே இருக்கின்ற மக்களோடு நல்ல தொடர்பு உண்டு. மைசூர் மாநில மக்கள் பலர் தமிழ் நாட்டிலே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டு மக்கள் பலர் மைசூர் மாநிலத்திலே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நிலைமையிலேதான், சிறு கசப்புகள் இருவரிடையே வளர்ந்தாலும் விபரீத ஏற்படுகின்ற

அதனால்

ஒருமைப்பாட்டுக்கு

விளைவு

இந்த

இந்திய

லவைப்பதாகவும், இரண்டு நிலங்களுக்கிடையேயும் பெருத்த விரோத உணர்வை ஏற்படுத்திவிடக்கூடியதாகவும் அமைந்து விடுமே என்கிற பயத்தின் அடிப்படையிலேதான் நாம் மிகுந்த பொறுமையை இதிலே கடைப்பிடித்து வருகின்றோம். 1968-ஆம் ஆண்டிலே ஹேமாவதி திட்டத்திற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றதைத் தொடர்ந்து நமது மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியதைப்போல், ஒரு அணைக்கட்டு அல்ல, ஹேமாவதியைவிட மிகுந்த ஆபத்தை தமிழகத்திற்கு விளைவிக்கக் கூடிய கபினி அணைக்கட்டுத் திட்டம், ஹாரங்கி அணைக்கட்டுத் திட்டம், சொர்ணவதி அணைக்கட்டுத் திட்டம் என்று இப்படிப்பட்ட திட்டங்கள் நம்முடைய இசைவைப் பெறாமல் முடிக்கப்படுமேயானால், பெரும் பாதகத்தை விளைவிக்கும் என்பதை இந்த அரசு உணர்ந்து, மத்திய அரசுக்கு அவ்வப்பொழுது எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் இங்கே மிகுந்த பெருமையோடு எடுத்துக்காட்டியதைப்போல், ஒவ்வொரு கட்டத்திலேயும் ரு அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கலந்து ஆலோசித்து அவர்கள் எவ்வழி செல்ல வேண்டும் இந்தப் பிரச்சினையிலே என்று சுட்டிக்காட்டிய நிலைமையில், தமிழக அரசு செயல்பட்டிருக்கின்றது. அப்படிச் செயல்பட்ட நேரத்திலேதான் 1968-ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதிய