உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

காவிரிப் பிரச்சினை மீது

கடிதத்திலே ஒரு குறிப்பைச் சொன்னது. தமிழ்நாட்டோடு இந்தப் பிரச்சினைக்கு கலந்துபேசி ஒரு முடிவு ஏற்படுகிற வரையில் மைசூரிலே கட்டப்படுகின்ற அணைகளை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு மைசூருக்குத் தெரிவித்திருக்கிறது என்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அதை மைசூர் அரசு நிறைவேற்றியதா, இல்லை, அதைப் பொருட்படுத்தியதா? இல்லை அதற்குத் தரவேண்டிய மதிப்பைத் தந்ததா? கிடையாது அப்பொழுது மைசூரிலிருந்த அரசு காங்கிரஸ் அரசு, நான் காங்கிரஸ் அரசு என்று கூறுவதற்குக் காரணம் இந்தப் பிரச்சினையிலே அரசியலைக் கலக்கவேண்டும் என்பதற்காக அல்ல, டெல்லியிலேயிருந்த காங்கிரசும் மைசூரில் இருந்த காங்கிரசும் ஒரே காங்கிரசாக இருந்த நேரத்திலேதான் இந்தப் பிரச்சினை உருவாயிற்று. ஆனால் அந்த நேரத்திலேயே அப்பொழுது கட்சி என்பதை மறந்துவிட்டு, தங்களுடைய மாநில உணர்வு என்கின்ற அந்த அடிப்படையில் மைசூருடைய முதலமைச்சர் வீரேந்திரபட்டீல், மத்திய அரசினுடைய தாக்கீதைப் பொருட்படுத்தாமல், தன்னிச்சையாக, “அவர்கள் அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும் அணைகளை நான் கட்டியே தீருவேன், அதற்குப் பணம் தந்தாலும் தராவிட்டாலும், இங்கே மாநிலத்திற்காகச் செலவழிக்க இருக்கின்ற பணங்களையெல்லாம், அந்த செல்வத்தையெல்லாம் அந்த அணைகளைக் கட்டுவதற்காக நான் திருப்பி விடுவேன்” என்கின்ற அளவிற்கு வீராவேசமாகப் பேசினார்கள். மைசூர் அப்படி நடந்துகொள்வது தவறான காரியம், என்று மத்திய அரசு அப்பொழுது சுட்டிக்காட்டியது. மத்திய அரசு அமைச்சர் திரு. கே. எல். ராவ் அவர்கள் அதை உணர்ந்தார். உணர்ந்ததை எடுத்துரைத்தார், மத்திய அரசிலே வீற்றிருக்கிற தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்கள் அதை உணர்ந்தார்கள். மைசூரின் போக்கு சரியானதல்ல என்றெல்லாம் குறை கூறினார்கள். இன்றைக்கு மைசூரில் ஒரு கட்சியின் ஆட்சி இல்லை. இன்னும் சொல்லப்போனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் இன்று ஆட்சிப் பொறுப்பிலே இல்லை. இன்று மைசூரை ஆண்டுகொண்டிருப்பது மத்திய அரசு. கவர்னர் வாயிலாக மத்திய அரசினுடைய ஆட்சி, குடியரசுத் தலைவருடைய