உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

69

ஆட்சி அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்பொழுது மத்திய அரசினுடைய உத்தரவை யார் மீறுகிறார்கள்? இதுதான் வேடிக்கை. முதலிலே மத்திய அரசு உத்தரவிட மைசூர் அரசு மீறியது. இப்போழுது மத்திய அரசினுடைய உத்தரவை மத்திய அரசே மீறிக்கொண்டிருக்கிறது. “நீ என்ன மீறுவது, நானே என்னுடைய உத்தரவை மீறிக்கொள்கிறேன் போ" என்று சொல்லிக்கொள்வதுபோல் இன்றைக்கு மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. கதை ஒன்று சொல்வார்கள். ஆற்றிலே குளித்துவிட்டு வீட்டுக்கு வருகிற மாமியார் தன்னுடைய வீட்டிலேயிருந்து வெறுங்கையோடு திரும்பிக்கொண்டிருக்கிற பிச்சைக்காரனைப் பார்த்து, என்ன அப்பா ஏன் வெறுங்கையோடு வருகிறாய் என்று கேட்க, உன் மருமகள் பிச்சையில்லை என்று சொல்லிவிட்டார் என்று சொல்ல, அப்படியா சொன்னாள், அவளுக்கு அவ்வளவு கொழுப்பா, வா வா என்று மறுபடியும் அழைத்துக்கொண்டு வந்து, உள்ளே போய் குடத்தை இறக்கிவைத்துவிட்டு வெளியே வந்து, பிச்சைக்காரனைப் பார்த்து, பிச்சை இல்லை என்று சொல்ல மருமகளுக்கு என்ன உரிமை. நான் சொல்கிறேன் நீ போ என்று பிச்சைக்காரனுக்கு ஆணையிட்டாளாம். அந்த மாமியாரைப்போல் இன்றைக்கு மத்திய அரசு நாங்கள் போடுகின்ற உத்தரவை மீறுவதற்கு மைசூர் அரசுக்கு என்ன அதிகாரம், நாங்களேதான் வந்து மீறுவோம் என்கின்ற அளவுக்கு இன்றைக்கு அவர்கள் போட்ட உத்தரவை அவர்கேளே மீறிக்கொண்டிருக்கிற ஒரு பரிதாபகரமான காட்சியை இந்தியத் துணைக்கண்டத்திலே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்திய ஒருமைப்பாட்டிற்காகத்தான் நாம் இந்த வேதனைகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறோம் என்று நான் தொடக்கத்திலே சொன்னேன். இங்கே பேசிய நம்முடைய எதிர்க் கட்சித் தலைவர் அவர்களும், மற்றவர்களும் பேசுகிற நேரத்திலேகூட சொன்னார்கள், மற்ற அவையிலே பேசிய உறுப்பினர்களும் தலைவர்களும் பேசுகிறபோதும் குறிப்பிட்டார்கள், நானும்கூட குறிப்பிட்டேன், "நாம் நடத்துகின்ற எந்தக் கிளர்ச்சியாக இருந்தாலும், நாம் மேற்கொள்கின்ற எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அந்த நடவடிக்கைகள் அனைத்தும்