உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

காவிரிப் பிரச்சினை மீது

உத்தரவாதம் கொடுங்கள் என்று கேட்பது நியாயத்திற்குப் புறம்பானதா என்பது தெரியவில்லை, ஆகவே நியாயத்தைச் சந்திக்க மத்திய அரசு இன்று தவறியிருக்கிறது என்பதை நானும் எடுத்துக்காட்ட அந்த அளவிற்கு இங்கு தரப்பட்டிருக்கிற ஒற்றிவைப்புத் தீர்மானங்கள் இந்த விளக்கங்களைத் தர வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்பதால் ஒற்றிவைப்புத் தீர்மானங்கள் கொடுத்திருக்கிற மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மேலும் இதுபற்றிய விவாதத்தை விரைவில் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட இருப்பதால் இந்தத் தீர்மானத்தை இதற்கு மேல் விவாதிப்பதற்குத் தேவையில்லை என்று நான் கருதுகிறேன் என தலைவர் அவர்களே, தங்களிடம் எடுத்துச் சொல்லி அமர்கிறேன். வணக்கம்.