கலைஞரின் சட்டமன்ற உரைகள்
81
பிரச்சினையை அவர்கள் மறந்துவிட்டு இதை ஒரு அரசியல் ரீதியில்தான் கவனிக்கிறார்கள் என்பதை எண்ண எண்ண வருந்தாமல் இருக்கமுடியாது.
அங்கு நமது நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விசுவநாதன் அவர்கள் குறுக்கிட்டு ஒன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அந்த நியாயமான வாதத்திற்கு நாடாளுமன்றத்தில் திரு. ராவ் அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. 1956-ம் ஆண்டு இன்டர் ஸ்டேட் வாட்டர் டிஸ்ப்யூட்ஸ் ஆக்ட்டை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விசுவநாதன் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டி 1956-ம் ஆண்டு இன்டர் ஸ்டேட் வாட்டர் டிஸ்ப்யூட்ஸ் ஆக்ட் செக்ஷன் 4-ல் 'When any request is received from any State Government in support of any water dispute and the Central Government is of opinion that the water dispute cannot be settled by negotiation, the Central Government shall by notification in this official Gazette constitute a Water Dispute Tribunal for the adjudication of the water dispute'. என்றிருக்கிறது என்பதைக் சுட்டிக்காட்டி அவர்கள் பேசிய நேரத்தில் அதற்கும் மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. கே. எல். ராவ் அவர்கள் எந்த விடையும் பகர்ந்தாரில்லை.
திரு. கே.எல். ராவ் அவர்கள் பேச்சுவார்த்தை முறித்துவிட்டது என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை தனக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை, ஆகவே இன்னும் பேச்சுவார்த்தைகளுக்கு இடம் இருக்கிறது என்று கருதுவார்களேயானால் இந்திய தலைமை அமைச்சர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் மைசூரில் நடைபெற்ற தேர்தலின்போது வெளிப் படையாகவே ஒரு கூட்டத்தில் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். நடுவர் தீர்ப்பைத் தவிர இந்தக் காவிரிப் பிரச்சினைக்கு வேறு வழியில்லை என்று இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இவ்வளவிற்கும் பிறகு நாம் 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை மதிக்க வேண்டுமென்று கேட்பது நியாயத்திற்கு புறம்பானதா? நீங்கள் அணைகளைக் கட்டிக்கொள்ளுங்கள், எங்களுக்கு ஆட்சேபணை கிடையாது. ஆனால் எங்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் பாதிக்கப்படாமல் அதற்கு
4 - க.ச.உ. (கா.பி)