80
காவிரிப் பிரச்சினை மீது
வெறும் வரட்டுக் கூச்சல் எழுப்புகிற கலாட்டாத்தனமான ஒரு நிலைமையில் தமிழக அரசு தீர்மானம் செய்திருக்கிறது என்ற அளவில் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டிருக்கிறது, அது இந்த பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றிய அத்தனை உறுப்பினர் களுடைய உரிமைகளையும் பாதிப்பதைப் போல்தான் எனக்குத் தோன்றுகிறது. ஆகவே, இந்தப் பேரவையின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய இந்த மன்றத்தின் தலைவராக உள்ள தாங்கள் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள் என நான் கருதுகிறேன்.
திரு. கே.எல். ராவ் அவர்கள் பேசும்போது இன்னொன் றையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதல் அமைச்சர்கள் மாநாட்டை பலமுறை கூட்டி இப்போது புதிதாக மூன்று மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் அழைத்துப் பேசப்போகிறேன் என்று கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் குறைந்து மதிப்பிடவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பேசுவதையும் நான் குறைவானது என்று கூறிடவிரும்பவில்லை. முதல் அமைச்சர்கள் மட்டத்தில் பேசப்படுகிறபோது கிடைக்கும் புள்ளிவிவரங்களை விட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் பேசப்படுகிற நேரத்தில் என்ன அதிகமான புள்ளி விவரங்கள் கிடைத்துவிடும் என்று எனக்குத் தெரியவில்லை. முதல் அமைச்சர்கள் கூடுகிற நேரத்தில் அந்தந்த அரசிற்குரிய பொறியாளர்கள் அந்தந்த அரசுக்குரிய அதிகாரிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளக்கூடிய நல்ல சூழ்நிலைகள் எல்லாம் இருக்கின்றன. அந்த நேரங்களை எல்லாம் தவற விட்டுவிட்டு திரு. ராவ் அவர்கள் அவர்களே வெளிப்படையாக எனது முயற்சி தோற்றுவிட்டது. பேச்சுவார்த்தை முறிந்து விட்டது என்று அறிந்த பிறகு மறுபடியும் நாடாளுமன்ற உறுப்பினர்களை நான் அழைத்துப் பேசப்போகிறேன் என்பது காலதாமதம் செய்வதற்காக ஒரு சமாளிப்பான வார்த்தையாகத்தான் எனக்குத் தோன்றுகிறதே தவிர வேறு அல்ல.
ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசப்போகிறேன் என்று குறிப்பிடுவது தஞ்சை, திருச்சியில் இருக்கிற, தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளுடைய